கடந்த (21.08.16) நாகப்பட்டினம் மாவட்டத்தில், கோடியக்கரையில் மூலிகைக் கண்காட்சியை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொடங்கி வைத்தார். இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்து கடலோர காடுகள் கோடியக்கரையில் மட்டுமே உள்ளன. இங்கு உலகில் வேறு எங்கும் கிடைக்காத அரிய மூலிகைகள் கோடியகாட்டில் மட்டுமே கிடைக்கின்றன. இக் கண்காட்சியை தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் பங்கேற்று பேசிய M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இந்த மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு, மருத்துவ துறைக்கு இதன் பயன்பாடுகள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தகவல்; மஜக ஊடகப்பிரிவு
செய்திகள்
தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் நாதன்
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை. சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் நாதன் நேற்று மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது.தமிழுக்கும், தமிழர்களுக்கும் மதிப்பளிக்கும் சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தொடர்ந்து இருமுறை பணியாற்றிய பெருமை அவருக்குண்டு. ஒன்றுபட்ட மலேயா எனும் மலேசியாவில்,தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்து தனது அறிவாற்றலாலும்,உழைப்பாலும் சிங்கப்பூரின் அரசியலில் உயர்ந்தவர். சிங்கப்பூரின் தந்தை லீக்ஃவான் யூ அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக வளர்ந்து, சிங்கப்பூரின் அதிபராக உயர்ந்தார்.எந்நிலைக்கு சென்றாலும், தாய் மொழி தமிழின் மீது அவர் அக்கறைக் கொண்டிருந்தார்.அழகான தமிழில், தமிழர்களோடு உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்தியாவுக்கு வெளியே தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த தலைவர்களில் நாதனும் வரலாற்றில் இடம் பெறுகிறார்.அவரை இழந்து தவிக்கும் சிங்கப்பூர் மக்களுக்கு எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 23_08_16
சிங்கப்பூர் தூதரக இரங்கல் குறிப்பில் மஜக பொதுச்செயலாளர் இரங்கல் !
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் நாதன் அவர்களின் மறைவை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகத்திற்கு மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார். அங்கு தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில்,"சிங்கப்பூர் தனது மூத்த குடிமகனை இழந்துவிட்டது என்றும்,பன்னாட்டு தமிழ் சமுதாயம் தனது மதிப்புமிக்க புதல்வரை இழந்துவிட்டது "என்றும் தனது இரங்கலை பதிவு செய்தார். அங்கிருந்த தூதரக அதிகாரி ROY KHO அவர்களிடமும் தனது இரங்கலை நேரில் தெரிவித்தார். பொதுச்செயலாளருடன்,கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, சிங்கப்பூர் சமூக சேவகரும்,FIM மற்றும் TMAS அமைப்பின் முக்கிய நிர்வாகியுமான தீன் உள்ளிட்டோரும் கையெழுத்திட்டனர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு (சென்னை)
இன்று சட்டப் பேரவையில் மஜக பொதுச்செயளாலர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரை.
(18.08.2016 இன்று காவிரி ஆறு உரிமை தொடர்பாகவும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பாகவும் 110விதியின் கீழ் முதல்வர் அறிவித்த திட்டங்களை வரவேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாலர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரை) உரிமைகளை விட்டுக் கொடுக்கும் தலைவர்கள் மத்தியில் ; உரிமைகளை போராடி பெறும் தலைவராக நமது முதல்வர் அம்மா அவர்கள் திகழ்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது இந்திய பண்பாடு ஆனால், அதில் ஊறுவிளைவிக்க நமது அண்டை மாநில அரசுகள் முயல்கின்றன. மலேசியாவிலிருந்து பிரிந்த நாடு சிங்கப்பூர், மலேசியாவிலிருந்துதான் அங்கு தண்ணீர் போகிறது. எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் அவ்விரு நாடுகளும் தண்ணீருக்காக மோதிக்கொண்டதில்லை. ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையில் 8 ஆண்டு கால போர் நடந்தது. ஆனால் யூப்ரடிஸ், டைக்ரீஸ் நதி நீரை ஈராக் தடுக்கவில்லை. வட ஆப்பிரிக்காவில் பாயும் நைல் நதி நீரை பல நாடுகள் பிரித்துக் கொள்கின்றன. அங்கு பல நாடுகளுக்கு மத்தியில் நைல் நதி மேலாண்மை வாரியம் செயல்படுகிறது. ஆனால்,தேசிய ஒருமைப்பாடு பேசும் நம நாட்டில் அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றன. இந்நிலையில் டெல்டா மாவட்ட மக்கள் மகிழும் வகையில் காவிரி ஆற்று உரிமையை சட்டப்படி நிலைநாட்ட தமிழ்நாடு "அரசு முயற்சி
பள்ளிவாசல் மற்றும் இமாம் மீது தாக்குதல் சம்பவம் மஜக மாநில துணை செயலாளர் புதுச்சேரி முதல்வரிடம் நேரில் கோரிக்கை…
ஆக.16., பாண்டிச்சேரியில் உருளையான் பேட்டை அருகில் உள்ள பள்ளிவாசலை தாக்கியும் அங்கு இமாம் நூருல் அமீன் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபடவேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வழியுறுத்தினோம். அதை கவனமாக கேட்டு நடவடிக்கை கண்டிப்பாக எடுப்பதாகவும் ஊறுதியளித்தார் மஜகமாநில துணை செயலாளர் புதுச்சேரி அப்துல்சமது மற்றும் புதுவை மாநில நிர்வாகிகள் பாண்டிச்சேரி முதல்வர் திரு நாராயனசாமி அவர்களை சந்தித்தார்கள். தாக்குதலில இடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் புதுவையின் அமைதிக்கும் இறையான்மைக்கும் பங்கம் விளைவிப்போர் மீது கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாநில துணை செயலாளரிடம் உறுதியளித்தார். உடன் மஜக பாண்டிச்சேரி நிர்வாகிகள் இருந்தனர். தகவல் : மஜக ஊடகபிரிவு புதுவை