இன்று சட்டப் பேரவையில் மஜக பொதுச்செயளாலர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரை.

(18.08.2016 இன்று காவிரி ஆறு உரிமை தொடர்பாகவும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பாகவும் 110விதியின் கீழ் முதல்வர் அறிவித்த திட்டங்களை வரவேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாலர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரை)

உரிமைகளை விட்டுக் கொடுக்கும் தலைவர்கள் மத்தியில் ; உரிமைகளை போராடி பெறும் தலைவராக நமது முதல்வர் அம்மா அவர்கள் திகழ்கிறார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது இந்திய பண்பாடு ஆனால், அதில் ஊறுவிளைவிக்க நமது அண்டை மாநில அரசுகள் முயல்கின்றன.

மலேசியாவிலிருந்து பிரிந்த நாடு சிங்கப்பூர், மலேசியாவிலிருந்துதான் அங்கு தண்ணீர் போகிறது. எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் அவ்விரு நாடுகளும் தண்ணீருக்காக மோதிக்கொண்டதில்லை.

ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையில் 8 ஆண்டு கால போர் நடந்தது. ஆனால் யூப்ரடிஸ், டைக்ரீஸ் நதி நீரை ஈராக் தடுக்கவில்லை.

வட ஆப்பிரிக்காவில் பாயும் நைல் நதி நீரை பல நாடுகள் பிரித்துக் கொள்கின்றன. அங்கு பல நாடுகளுக்கு மத்தியில் நைல் நதி மேலாண்மை வாரியம் செயல்படுகிறது.

ஆனால்,தேசிய ஒருமைப்பாடு பேசும் நம நாட்டில் அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றன.

இந்நிலையில் டெல்டா மாவட்ட மக்கள் மகிழும் வகையில் காவிரி ஆற்று உரிமையை சட்டப்படி நிலைநாட்ட தமிழ்நாடு “அரசு முயற்சி எடுக்கும் என மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்த அறிவிப்பு சிறப்புக்குரியது.

மழையின்மையாலும்,காவிரி தண்ணீர் பற்றாக்குறையாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் பல புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள்.

இது திட்டங்களை வெறுமனே அறிவிக்கும் அரசல்ல.அதை வென்றுக் காட்டும் அரசு.

இவ்வாறு M.தமிமுன் அன்சாரி MLA கூறினார்.

தகவல்;

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்