தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் நாதன்

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை.

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் நாதன் நேற்று மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது.தமிழுக்கும், தமிழர்களுக்கும் மதிப்பளிக்கும் சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தொடர்ந்து இருமுறை பணியாற்றிய பெருமை அவருக்குண்டு.

ஒன்றுபட்ட மலேயா எனும் மலேசியாவில்,தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்து தனது அறிவாற்றலாலும்,உழைப்பாலும் சிங்கப்பூரின் அரசியலில் உயர்ந்தவர்.

சிங்கப்பூரின் தந்தை லீக்ஃவான் யூ அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக வளர்ந்து, சிங்கப்பூரின் அதிபராக உயர்ந்தார்.எந்நிலைக்கு சென்றாலும், தாய் மொழி தமிழின் மீது அவர் அக்கறைக் கொண்டிருந்தார்.அழகான தமிழில், தமிழர்களோடு உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்தியாவுக்கு வெளியே தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த தலைவர்களில் நாதனும் வரலாற்றில் இடம் பெறுகிறார்.அவரை இழந்து தவிக்கும் சிங்கப்பூர் மக்களுக்கு எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
23_08_16