பிப்:21 மஜக சார்பு அமைப்பான மனித நேய கலாச்சாரப் பேரவையின் ஆஸ்திரேலிய மண்டல செயலாளர் அதிரை சர்புதீன் காக்கா, அவர்களின் மகன் முகம்மது அப்துல்லா மண மகனுக்கும், மணமகள் சுமையா, அவர்களுக்கும் இன்று அதிராம்பட்டினத்தில் நிக்காஹ் எனும் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது சர்புதீன் காக்கா அவர்கள் தஞ்சை மாவட்டத்தில், தெற்கே மல்லிப்பட்டினம் தொடங்கி வடக்கே அணைகரை வரை, அவர் மாவட்ட தலைவராக இருந்த போது ஆற்றிய சேவைகளையும், சமூக நீதி போராட்டங்களுக்காக சிறை சென்றதையும், அதனால் அவர் தனிப்பட்ட முறையில் சந்தித்த இழப்புகளையும் பொதுச் செயலாளர் அவர்கள் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரபல மார்க்க அறிஞர் அலி அக்பர் உமரீ அவர்களும் பங்கேற்று திருமண உரையாற்றினார். இவர்களுடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், அமீரக மண்டல துணைச் செயலாளர் ஜியாவுல் ஹக் ஆகியோரும் பங்கேற்றனர். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக், நகரச் செயலாளர் மர்ஜூக் உள்ளிட்ட மஜக வினரும் பங்கேற்றனர். முன்னதாக மக்கா பள்ளி ஆக்கிரமிப்பு குறித்தும், அதை மீட்பது குறித்தும் அப்பகுதி ஜமாத்தினர்
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
நலம் பெற்று வரும் செல்லச்சாமி அண்ணன்.!மஜக பொ.செ. மு.தமிமுன் அன்சாரி நலம் விசாரிப்பு!
பிப்:21,மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி அண்ணன் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இன்று திருத்துறைப்பூண்டி மருத்துவமனையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்களும் உடன் சென்றார். இன்னும் 4 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறிய அவர், தற்போது மூச்சு திணறல் சற்று குறைந்திருப்பதாகவும் கூறினார். இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் ரஹ்மத்துல்லா, அமீரக துணைச் செயலாளர் ஜியாவுல் ஹக், நாகை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணைச் செயலாளர் முபீன், கட்டிமேடு கிளை செயலாளர் ஹாரிஸ், ஆகியோரும் உடன் சென்று நலம் விசாரித்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம் 21.02.2022
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வாக்களிப்பு…
மஜக மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் தலைமையில் சென்னை மாநகராட்சியின் 94 வார்டில் இறுதி கட்ட பிரச்சாரம்.!
சென்னை.பிப்.17.,பெருநகர சென்னை மாநகராட்சியின் 94-வது வார்டில் போட்டியிடும் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் திரு.பக்கீர் மைதீன் அவர்கள் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக மஜக இளைஞரணி மாநில செயலாளர் அஸாருதீன் தலைமையிலான மஜகவினர் வார்டு முழுவதும் இறுதிகட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். உடன் மாநில மருத்துவ சேவை அணியின் செயலாளர் ரஹ்மான், மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவர்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மத்தியசென்னை 17.02.2022
அதிரை நகராட்சி தேர்தல் களம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆய்வு!
பிப்:13.,தஞ்சை (தெற்கு ) மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் மூன்று வார்டுகளில் மனித நேய ஜனநாயக கட்சியினர் தென்னை மர சின்னத்தில் போட்டியிடுகின்றனர். பைசல் அகமது அவர்கள் 05 வது வார்டிலும் , ஹாஜா மர்ஜுக், அவர்கள் 17வது வார்டிலும் சாகுல் ஹமித் அவர்கள் 24 வார்டிலும் போட்டியிடுகின்றனர். இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அதிரை மஜக தேர்தல் பணிமனைக்கு வருகை தந்து வேட்பாளர்களை சந்தித்து கள நிலவரங்கள் குறித்து விசாரித்தார். பிறகு மஜக தேர்தல் பணிக்குழுவினரை சந்தித்து இனி வரும் களப்பணிகள் குறித்து ஆலோசித்தார். இங்கு துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், அவர்கள் அடிக்கடி வருகை தந்து களப்பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இங்கு 20 அம்ச அடிப்படை கோரிக்கைகளை முன் வைத்து மஜக வினர் களப்பணியாற்றி வருகின்றனர். பிறகு நல்லிணக்க ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் பொதுச் செயலாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர். மஜக சார்பு அமைப்பான MKP யின் ஆஸ்திரேலியா மண்டல செயலாளர் சர்புதீன் காக்கா, அவர்களும் பொதுச் செயலாளரை சந்தித்து உரையாடினார். இந்நிகழ்வுகளில் மஜக மாவட்ட செயலாளர் அதிரை ஷேக், மற்றும் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 13.02.2022