பிப்:21 மஜக சார்பு அமைப்பான மனித நேய கலாச்சாரப் பேரவையின் ஆஸ்திரேலிய மண்டல செயலாளர் அதிரை சர்புதீன் காக்கா, அவர்களின் மகன் முகம்மது அப்துல்லா மண மகனுக்கும், மணமகள் சுமையா, அவர்களுக்கும் இன்று அதிராம்பட்டினத்தில் நிக்காஹ் எனும் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது சர்புதீன் காக்கா அவர்கள் தஞ்சை மாவட்டத்தில், தெற்கே மல்லிப்பட்டினம் தொடங்கி வடக்கே அணைகரை வரை, அவர் மாவட்ட தலைவராக இருந்த போது ஆற்றிய சேவைகளையும், சமூக நீதி போராட்டங்களுக்காக சிறை சென்றதையும், அதனால் அவர் தனிப்பட்ட முறையில் சந்தித்த இழப்புகளையும் பொதுச் செயலாளர் அவர்கள் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பிரபல மார்க்க அறிஞர் அலி அக்பர் உமரீ அவர்களும் பங்கேற்று திருமண உரையாற்றினார்.
இவர்களுடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், அமீரக மண்டல துணைச் செயலாளர் ஜியாவுல் ஹக் ஆகியோரும் பங்கேற்றனர்.
தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக், நகரச் செயலாளர் மர்ஜூக் உள்ளிட்ட மஜக வினரும் பங்கேற்றனர்.
முன்னதாக மக்கா பள்ளி ஆக்கிரமிப்பு குறித்தும், அதை மீட்பது குறித்தும் அப்பகுதி ஜமாத்தினர் பொதுச் செயலாளரை சந்தித்து கலந்தாலோசனை செய்தனர்.
தகவல்„
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்