நலம் பெற்று வரும் செல்லச்சாமி அண்ணன்.!மஜக பொ.செ. மு.தமிமுன் அன்சாரி நலம் விசாரிப்பு!

பிப்:21,மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி அண்ணன் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று திருத்துறைப்பூண்டி மருத்துவமனையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அவருடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்களும் உடன் சென்றார்.
இன்னும் 4 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறிய அவர், தற்போது மூச்சு திணறல் சற்று குறைந்திருப்பதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் ரஹ்மத்துல்லா, அமீரக துணைச் செயலாளர் ஜியாவுல் ஹக், நாகை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணைச் செயலாளர் முபீன், கட்டிமேடு கிளை செயலாளர் ஹாரிஸ், ஆகியோரும் உடன் சென்று நலம் விசாரித்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவாரூர்_மாவட்டம்
21.02.2022