இன்று சென்னையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய தமிழக ஆளுநர் திரு.ரவி அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ( PFI )அமைப்பு குறித்து கூறிய குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கிறது. ஒரு ஆளுநர் இப்படி பேசுவது நியாயமா? என்ற கேள்விகள் எழுகிறது. இந்நிலையில் ஆளுநர் பொறுப்பில் இருக்கக் கூடியவர், ஒரு அமைப்பின் மீது குற்றம் சாட்டும் போது, அதற்கான ஆதாரத்தை கூறி தனது கருத்தை முன்வைக்க வேண்டும். மனம் போன போக்கில் பேசக் கூடாது. அது பதட்டத்தை தூண்டுவதாக அமைந்து விடக் கூடாது. பொது வெளியில் வீச்சரிவாள், வெட்டுக் கத்தி ஆகியவற்றோடு ஊர்வலம் போகும் அமைப்பினர், சிறுபான்மையினருக்கு எதிராக பகிரங்கமாக துப்பாக்கி பயிற்சி எடுக்கும் பயங்கரவாத அமைப்புகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது உள்துறை அமைச்சகத்தால் காவி பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் மீதெல்லாம் இத்தகைய விமர்சனங்களை ஆளுநர் முன்வைப்பாரா? என்ற ஜனநாயக சக்திகளின் கேள்விகளுக்கு பதில் தேவை. தமிழ் , தமிழர் ,தமிழகம் ஆகிய விவகாரங்களில் எதிர்மனநிலை கொண்டவராக தமிழக ஆளுநர் செயல் பாடுகிறார் என்ற விமர்சனங்கள் பரவலாகி வரும் நிலையில், அவரது இத்தகைய பேச்சுகள் ஏற்கத்தக்கதல்ல. இதை மனிதநேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது. இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச்
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
வறுமை ஒழிந்து வளங்கள் பெருகட்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்து செய்தி!
முஸ்லிம்களின் வாழ்வில் இன்பம் பொங்கும் மாதமாக ரமலான் திகழ்கிறது. இம்மாதம் முழுக்க நோன்பிருந்து;பிரார்த்தனைகளில் திளைத்து ; உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி; ஏழைகளுக்கு செல்வங்களை வாரி வழங்கி ; அதன் வழியாக ஈகைத்திருநாளை கொண்டாடி மகிழும் பூரிப்புக்கு எல்லைகள் இல்லை. சுவையான உணவுகள் அருகில் இருந்தும்; அண்டை அயலார் யாரும் இல்லாத நிலையிலும் கூட ; இறைவனால் நாம் கண்காணிப்படுகிறோம் என்ற பக்தியுணர்வோடு நோன்புகளை கழிக்கும் பொழுதுகள் உன்னதமானவை. மனங்களை மலரச் செய்யும் புனித ரமலான் மாதத்தை நிறைவு செய்து, ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத்திருநாளை உலகம் எங்கும் வாழும் சுமார் 200 கோடி மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். நமது இந்திய திருநாட்டில் பல் சமூக மக்களின் வாழ்த்துக்களோடு இத்திருநாள் மணம் வீசுகிறது. இந்நன்னாளில் வறுமை ஒழிந்து ; வளங்கள் பெருக இறைவனிடம் பிரார்த்திப்போம். அமைதியும், சமாதானமும் பரவி, சகோதரத்துவம் வளர உறுதியேற்போம். ஈகைத்திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, மே 2, 2022 ஹிஜ்ரி 1443
துபையில் Mkp இஃப்தார் அன்பளிப்புகள் MKP மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்..
ஏப்ரல் 27, ஐக்கிய அரபு அமீகம் துபாயில் இந்தியர்களுக்கு மத்தியில் பல்வேறு மனிதநேய சேவைகளை ஆற்றி வரும் மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் இன்று ரமலானை முன்னிட்டு, இஃப்தார் உணவு பைகள் வழங்கப்பட்டது. ஹோர் அல் அன்ஸ் பகுதியில் ஆசிய தொழிலாளர்கள் நிறைந்த இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வினியோகத்தை தொடங்கி வைத்தார். பிரியாணி,ஷவர்மா, பழங்கள், மோர், பழரசங்கள், தண்ணீர் உள்ளிட்ட பொருட்களுடன் உணவு பைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது மனநிறைவு தருவதாக பொதுச் செயலாளர் கூறியதோடு, துபாய் MKP மனிதநேய சொந்தங்களை வெகுவாக பாராட்டினார். இந்நிகழ்வில் துபாய் MKP பொருளாளர் லால்பேட்டை பயாஸ், கீழக்கரை இப்ராகிம், திட்டச்சேரி அய்யூப், திட்டச்சேரி சித்திக், திட்டச்சேரி ஹாஜா நஜ்முதீன் நாச்சிக்குளம் ராஷிது, காயல் சபீர், காரைக்கால் முகம்மது அப்துல் ஜப்பார் , சமூக ஆர்வலர்கள் சீர்காழி அன்வர், மதுரை ரபீக், வடகரை நூருல்லா,ரமேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். தகவல், #தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING #ஐக்கிய_அரபு_அமீரகம்
செப்.10 தலைமை செயலகம்முற்றுகை!நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆலோசனை!!
ஏப்ரல்.22., எதிர் வரும் செப்டம்பர் 10 அன்று ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யக்கோரி சென்னையில் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. அது சம்பந்தமாக லால்பேட்டையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் தஞ்சை வடக்கு, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் தெற்கு ஆகிய நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #டெல்டா_மண்டலம் 21.04.2022
பொதக்குடியில் மஜக சார்பில் தினமும் 170 நபர்களுக்கு சஹர் உணவு விநியோகம்..!
ஏப்: 20., திருவாரூர் மாவட்டம் பொதக்குடி மஜக கிளை சார்பாக தினந்தோறும் 170 நபர்களுக்கு புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு சஹர் உணவு வழங்கப்படுகிறது. மேலும் உணவு தயாரித்து வழங்கும் ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், துணை செயலாளர் நத்தர் கனி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம் 20.04.2022