பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக விருதுநகர் மாவட்டம் ஜமாஅத்துல் உலமா மார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் அண்ணன் S.S.ஹாரூன் ரஷீது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். தகவல் ம.ஜ.க ஊடக பிரிவு விருதுநகர் மாவட்டம்
மஜக பொதுக்கூட்டம்
மஜக பொதுக்கூட்டம்
கும்பகோணம் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் மஜக அவைத்தலைவர் பங்கேற்பு…
ஜமாத்துல் உலமாவின் முன் முயற்சியில் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைந்து பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மத்திய அரசை கண்டித்து #குடந்தையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மஜக அவைத்தலைவர் #நாசர்_உமரி பங்கேற்று உரையாற்றினார். முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், SDPI கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர், தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட தலைவர்கள் வந்திருந்தனர். இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் உரையாற்றினர். ஆண்கள், பெண்கள் என எங்கும் மக்கள் கூட்டம் நிறைந்து எங்கும் பேரெழுச்சியாக இருந்தது. உலமாக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தகவல்: மஜக ஊடகப்_பிரிவு தஞ்சை வடக்கு மாவட்டம்.
திருச்சி கண்டன பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பபு…
ஜமாத்துல் உலமாவின் முன் முயற்சியில் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைந்து பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மத்திய அரசை கண்டித்து #திருச்சியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA எழுச்சியுரையாற்றினார். முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் வந்திருந்தனர். இதில் SDPI, TMMK, JAQH,INTJ, PFI அஹ்லே ஹதீஸ், WPI உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் உரையாற்றினர். உழவர் சந்தை திடல் நிறைந்து எங்கும் பேரெழுச்சியாக இருந்தது. உலமாக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தகவல்; மஜக ஊடகப்_பிரிவு (திருச்சி மாவட்டம்)
மஜக சார்பில் நவம்பர் 27 அன்று கோவையில் மக்கள் விரோத மத்திய பா.ஜா.க அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்…
உடுமலைப்பேட்டையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான பெருந்திரள் பொதுக்கூட்டம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஜமாத்துல் உலமாவின் ஏற்பாட்டில் பொதுசிவில் சட்டத்திற்கெதிரான பொதுக்கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது. உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துகுளம் ஜமாத்தார்கள் பெருந்திரளாக குவிந்தனர். இப்பொதுக்கூட்டத்தில் மஜக பொது செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, பள்ளப்பட்டி அரபிகல்லூரி பேராசிரியர் ஹபீப் முஹம்மது தாவூதி ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு, திருப்பூர் மாவட்டம்.