திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 8.11.16 அன்று மாலை ஆவடி பெரு நகராட்சி அனைத்து பள்ளிவாசல் சார்பாக மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது கூட்டம் நடை பெற்றது. இப்பொது கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரஷீத், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் Ex.mp, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் K.A.M.அபுபக்கர் M.L.A, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் S.M.பாக்கர், S.D.P.I.மாநில தலைவர் தெஹ்லான் பாஃகவி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் P.அப்துல் சமத், சமூக ஆர்வலர் S.மசூதா ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பொது கூட்டத்திற்கு அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு செயலாளர் A.ஹம்சா தலைமை வகித்தார். அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் ஹாஜி.S.சர்புதீன் முன்னிலை வகித்தார் . தகவல்: மஜக ஊடக பிரிவு திருவள்ளூர் மாவட்டம்.
மஜக பொதுக்கூட்டம்
மஜக பொதுக்கூட்டம்
பொதுசிவில் சட்டத்திர்க்கு எதிராக நாகையில் பேரெழுச்சி!
கடந்த (08.11.16) அன்று நாகப்பட்டினத்தில் ஜமாத்துல் உலமா முன்முயற்ச்சியில் பொதுசிவில் சட்டத்திர்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதரனி MLA, முஸ்லிம் லீக் சார்பில் அப்துல் ரஹ்மான் EX.MP, தேசிய லீக் சார்பில் நிஜாமுதின் EX.MLA, JAQH சார்பில் முஹைதின் பக்ரி, தேசிய லீக் கட்சி சார்பில் தடா ரஹீம், sdpi கட்சி சார்பில் நிஜாம் மைதீன், திராவிட கழகம் சார்பில் அன்பழகன், மமக சார்பில் ஜபருல்லா, ஜமாத்துல் உலமா சார்பில் முகமது ரிழா பாஜீல் பாகவி ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு, நாகை தெற்கு.
வாணியம்பாடியில் களம் கண்ட மஜக!
நவ.06., கடந்த 5\11\2016 சனிக்கிழமை மாலை வேலூர் மேற்கு மாவட்டம் வாணியம்பாடியில் மஜக சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி, இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா.தா.பாண்டியன், கர்நாடகா முஸ்லிம் முத்தாஹித் தஹ்ரிக் தலைவர் முக்தார் அஹமது, JAQH பொதுச்செயலாளர் அன்சார் ஹூசைன் பிர்தௌஸி, ஜமாத் இஸ்லாமி ஹிந்த் மாநில செயற்குழு உறுப்பினர் அதீக்வுர் ரஹ்மான், வாணியம்பாடி நகர தலைமை காஜி.சையத் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் பேசினார்கள். முழுவதும் உள்ளூர் மக்களே கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி.. மஜகவின் கள வலிமையை காட்டுவதாக அமைந்தது. தோழர் தா.பாண்டியன் அவர்களின் பேச்சு மோடி அரசை வெளுத்து வாங்கியது. நிறைவுரை ஆற்றிய மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பொதுசிவில் சட்டத்தை தோலுரித்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் ஊர் மக்களும் பிரமுகர்களும் பொதுச்செயலாளரை சந்தித்து மஜகவின் பணிக்காக வாழ்த்துகளை தெரிவித்தார்கள். தகவல்: மஜக ஊடகப் பிரிவு வேலூர் மேற்கு மாவட்டம்.
சென்னை மிரண்டது! மஜக பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி!
நவ.05., நேற்று (04/11/2016) சென்னை மண்ணடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுசிவில் சட்டம் கொண்டு வரத் துடிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து "சமூக நீதிக்கான பொதுக்கூட்டம்" மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. இதில் M.தமிமுன் அன்சாரி, தொல்.திருமாவளவன், S.S.ஹாரூண் ரஷீத், டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது, மெளலவி சம்சுதீன் நாசர் உமரி, தாவுத் மியாக் கான், அடையாறு இமாம் மெளலவி சதீதுத்தீன் பாகவி, N.A.தைமிய்யா உள்ளிட்டோர் உரையாற்றினர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்த பொதுமக்கள் திரண்டதால், 7 மணியளவில் பாரிமுனை முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 8 மணியளவில் தம்புச்செட்டித் தெருவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். அம்பாள் பிரஸ் தொடங்கி மெட்ரோ பேலஸ் தாண்டியும் கூட்டம் நீண்டது. சாலையின் இருபுறங்களிலும் இடம் கிடைக்காமல் மக்கள் நின்றபடியே நிகழ்ச்சிகளைப் பார்த்தனர். ஜமாத்தார்கள், பெண்கள், இளைஞர்கள், பிற சமுதாய சகோதரர்கள் என கூட்டம் பன்முகத்தன்மையோடு இருந்தது. தலைவர்களின் ஆவேச, அர்த்தமுள்ள உரைகளை கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்தது! சென்னையில் மஜக மத்திய அரசை மிரட்டியிருக்கிறது. விரைவில் இது தமிழகம் முழுக்க பரவும்! எல்லாப் புகழும் இறைவனுக்கே! தகவல்; மஜக ஊடகப்பிரிவு(சென்னை)