ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் மஜக அலுவலகம் வருகை!


ஈரோடு:மார்ச்,17.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வே.ரா மஜக அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.

அவரை மாநில துணை செயலாளர் பாபுஷாஹின்சா, அவர்கள் வரவேற்று சால்வை அணித்து வாழ்த்து தெரிவித்தார்.

வேட்பாளர் அவர்கள் பேசும்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் பணிகளை கடந்த காலங்களில் பார்த்துள்ளேன் தற்போது தங்கள் ஆதரவை நாடி நான் தங்களை சந்திக்க வந்துள்ளேன் நிச்சயம் நான் வெற்றி பெற்று தங்களின் மக்கள் நலக்கோரிக்கைகளுக்காக குரல் கொடுப்பேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஷஃபிக், சுல்தான் பேட்டை பள்ளி தலைமை இமாம் மௌலானா அஹமது தாவூதி, மாவட்ட பொருளாளர் முகமது அலி, மாவட்ட துணை செயலாளர் கள், ரியாஸ், பக்கிர் முகமது, மாவட்ட தொழிற்சங்க தலைவர் சபர் அலி, மாணவர் இந்தியா மாவட்ட தலைவர் யாசர், மாவட்ட செயலாளர் ஃபயாஸ், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் திலிப், அக்ரஹார பகுதி கழக செயலாளர் ஜாவித், மற்றும் மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
17.03.2021