
மார்ச்.17,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளித்துள்ள நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் அவர்களும், மாவட்ட மேலிட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான நாகை முபாரக் ஆகியோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கூட்டணி கட்சியினரின் வெற்றிக்காக உழைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இதில் மஜக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், பொருளாளர் புலிவலம். ஷேக் அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட துணை செயலாளர் செய்யது மீரான் மற்றும் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.