அமீரகம்.ஜுன்.02., உலகமெங்கும் இந்தியர்களுக்கு மத்தியில் மனிதநேய சேவைகளை முன்னெடுத்து வரும் அமீரக (UAE) #மனிதநேய_கலாச்சார_பேரவை (MKP) செயற்குழு கூட்டம் துபாயில் அமீரக மண்டல செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் துபை, அபுதாபி, ஷார்ஜா, அல்-அய்ன் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இனி துபை, அபுதாபி, ஷார்ஜா, அல்-அய்ன் நிர்வாகிகள் மாநில அந்தஸ்து பெற்று மாநகர நிர்வாகிகள் என்றும், அதற்கு கீழ் செயல்படும் அமைப்புகள் கிளைகள் என்றும், மொத்த அமீரக நிர்வாகம் என்பது மண்டல என்றும் அழைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அஜ்மான், உம்முல் கொய்ன்,புஜெரா, ராசல்கைமா ஆகிய மாநகரங்களை சீரமைத்து கட்டமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. தாயகத்திலிருந்து வருபவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்று கொடுப்பது, அமீரகத்தில் இருப்பவர்களுக்கு தாயகத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து கொடுப்பது, ஐக்கிய அரபு அமீரக அரசின் சட்டங்களை பற்றிய விழிப்புணர்வை தமிழர்களுக்கு ஏற்படுத்துவது, இங்கு வாழும் தமிழர்களுக்கு மத்தியில் சகோதரத்துவ நட்பை வலிமைப்படுத்துவது, சமூக இணையதள பதிவுகளில் சமூக நல்லிணக்கத்தை நுட்பமாக முன்னெடுப்பது, ஐக்கிய அரபு அமீரக அரசின் சிறப்புகளை தமிழர்கத்தில் பரப்புவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
துபை MKP இஃப்தார் நிகழ்வில்… தூத்துக்குடி தியாகி ‘ஸ்னோலின்’ பெயரில் நுழைவாயில்….! காஷ்மீர் குழந்தை ‘ஆஃசிபா’ பெயரில் அரங்கம்….! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்பு!
அமீரகம்.ஜூன்.02., ஐக்கிய அரபு அமீரகம் துபையில் மனிதநேய கலாச்சார பேரவை (MKP)யின் சார்பில் நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமீரக MKPயின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரும் எழுச்சியோடு மக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வு நடைபெற்ற அரங்கத்தின் நுழைவாயிலுக்கு தூத்துக்குடியில் 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக போராடிய 13 பேரில், வாயில் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி உயிர் துறந்த 17 வயது சகோதரி '#ஸ்னோலின்' பெயரை சூட்டியிருந்தனர். அதுபோல, அரங்கத்திற்கு காவி தீவிரவாதிகளால் காஷ்மீரில் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளாகி இறந்த அன்பு குழந்தை #ஆஃசிபாவின் பெயரை சூட்டியிருந்தனர். நோன்பு துறப்புக்கு முன்பாக, தூத்துக்குடி #ஸ்டைர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர் துறந்த தியாகிகளுக்கு மரியாதை செய்யும் வகையில் 1 நிமிடம் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். இந்த மூன்று நிகழ்வுகளும் தேசத்தை கடந்து வாழும் இந்தியர்களிடம் ஏற்பட்டிருக்கும் வலிமையான அரசியல் தாக்கத்தை உணர்த்தும் வகையில் இருந்தது. இதில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொது செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழக அரசியல் குறித்து சிறப்புரையாற்றினார்கள். பிறகு துண்டு சீட்டுகள் மூலம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். 6 மணிக்கெல்லாம் கூட்ட அரங்கம் நிறைந்து. அரங்கத்திற்கு வெளியில் மக்கள் திரண்டிருந்தனர்.
எல்லா வேத நூல்களையும் எல்லோரும் படிக்க வேண்டும்..! அல்-அய்ன் குர் ஆன் இலக்கிய விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!
ஐக்கிய அரபு அமீரகம்-அல் அய்ன் Indian Social Centre சார்பில், புனித ரமலானை முன்னிட்டு, திருக்குர்ஆன் ஓதும் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியுள்ளார். அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின் வருமாறு... ISC அமைப்பில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் என எல்லோரும் இந்தியர்கள் என்ற சகோதரத்துவ உணர்வோடு இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் உலகத்திற்கு நாம் கூறும் செய்தியாகும். இத்தகைய ஒற்றுமைத்தான் திருக்குர்ஆன் போதிக்கிறது, அன்பை, சகோதரத்துவத்தை, சகிப்புத் தன்மையை, வணிகத்தை, அரசியலை, ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை, சமத்துவத்தை, வாழ்வியலைதான் குர்-ஆன் போதிக்கிறது. அதனால்தான் இதை உலகப் பொதுமறை என்கிறோம். இது அனைவருக்குமான வழிகாட்டும் வேத நூலாகும். இதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். திருக்குர் ஆனின் சிறப்பு என்னவென்றால் அது யாராலும் எழுதப்பட்டதல்ல- வானவர் ஜிப்ரயில் (அலை) மூலம் ஒலி வடிவில் அது நபிகளாருக்கு அருளப்பட்டது. குரல் வடிவில் வழங்கப்பட்ட வேத வரிகளை பின்னர் கலீபாக்கள் அதை தொகுத்து ஓரே குர் ஆன் என உலகத்திற்கு அளித்தார்கள். திருக்குர்ஆன் மிகச் சிறந்த இலக்கிய நூலும் கூட. இதை மிகச்
துபையில் நாகூரார் இஃப்தார் நிகழ்ச்சி..! நாகூர்சங்கம்.Com இணையத்தை தொடங்கி வைத்தார்…!! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA!
துபாய்.ஜூன்.01., நேற்று 31.05.18 ஐக்கிய அரபு அமீரகம் துபையில் அமீரக நாகூர் சங்கம் சார்பில், பிரபல சமூக ஆர்வலர் ஷேக்தாவுது மரைக்காயர் தலைமையில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி (இஃப்தார்) நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளரரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது #Nagoor_Sangam.com என்ற இணையத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அமீரக நாகூர் சங்கம் 'ANAS' என்று சுருக்கமாக கூறப்படுகிறது. 'அனஸ்' என்றால் அன்பு என்று அர்த்தம். நாகூர் மக்களின் மீது கொண்ட அன்பு காரணமாக 'அனஸ்' உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரபல நபித்தோழரின் பெயரும் கூட 'அனஸ் ரலி' என்பதை நினைக்கும் போது, மிக சரியான ஒரு வார்த்தை நாகூர் மக்களை இணைக்கிறது. அனைத்துக் சமூக மக்களும் சேவையாற்ற இச்சங்கம் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வெளிநாடுகளில் வாழும் நாகூர் மக்களை இந்த இணையதளம் இணைக்க விருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இணைய தளத்தை நல்ல வகையில் பயன்படுத்துங்கள். சமூக இணையதளங்களில் பொறுப்புணர்வோடு கருத்துக்களை பகிரவேண்டும். விரைவில் நாகூரில் ஒரு ஐக்கிய ஜமாத்தை நீங்கள் உருவாக்க வேண்டும் என்றார். தொகுதி மக்களுக்கு தான் செய்து வரும் பணிகள் குறித்தும் பட்டியலிட்டார். இந்நிகழ்வில் அமீரக
சனாயா மண்டலத்தில் சாரை சாரையாக இளைஞர்கள் மஜகவை நோக்கி…!
கத்தார்.மே. 30., இன்று மாலை கத்தார் சனையா மண்டலத்திற்கு உட்பட்ட #கிராண்ட்_மால் பகுதியில் மண்டல செயலாளர் சகோதரர் நூர் முஹம்மத் தலைமையில் புதிதாக பல இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வின் போது, அனைவருக்கும் எதிர்வரும் ஜூன்-01 வெள்ளி மாலை நடைபெறவுள்ள #சமூக_நல்லிணக்க_இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. தகவல்: #MKP_IT_WING #MKP_சனையா_மண்டலம் #மனிதநேய_கலாச்சார_பேரவை_கத்தார்.