எழுச்சியோடு நடைப்பெற்ற MKPயின் அமீரக செயற்குழு கூட்டம்!

அமீரகம்.ஜுன்.02., உலகமெங்கும் இந்தியர்களுக்கு மத்தியில் மனிதநேய சேவைகளை முன்னெடுத்து வரும் அமீரக (UAE) #மனிதநேய_கலாச்சார_பேரவை (MKP) செயற்குழு கூட்டம் துபாயில் அமீரக மண்டல செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் துபை, அபுதாபி, ஷார்ஜா, அல்-அய்ன் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இனி துபை, அபுதாபி, ஷார்ஜா, அல்-அய்ன் நிர்வாகிகள் மாநில அந்தஸ்து பெற்று மாநகர நிர்வாகிகள் என்றும், அதற்கு கீழ் செயல்படும் அமைப்புகள் கிளைகள் என்றும், மொத்த அமீரக நிர்வாகம் என்பது மண்டல என்றும் அழைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அஜ்மான், உம்முல் கொய்ன்,புஜெரா, ராசல்கைமா ஆகிய மாநகரங்களை சீரமைத்து கட்டமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தாயகத்திலிருந்து வருபவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்று கொடுப்பது, அமீரகத்தில் இருப்பவர்களுக்கு தாயகத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து கொடுப்பது, ஐக்கிய அரபு அமீரக அரசின் சட்டங்களை பற்றிய விழிப்புணர்வை தமிழர்களுக்கு ஏற்படுத்துவது, இங்கு வாழும் தமிழர்களுக்கு மத்தியில் சகோதரத்துவ நட்பை வலிமைப்படுத்துவது, சமூக இணையதள பதிவுகளில் சமூக நல்லிணக்கத்தை நுட்பமாக முன்னெடுப்பது, ஐக்கிய அரபு அமீரக அரசின் சிறப்புகளை தமிழர்கத்தில் பரப்புவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், விவசாயிகள் அணி மாநில செயலாளர் நாகை முபாரக் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

தகவல்;
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை,
#MKP_IT_WING_UAE
#MKP_ஐக்கிய_அரபு_அமீரகம்.

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*