கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை சாலைகளில் திரும்பும் திசையெல்லாம் மஜக முன்னெடுக்கும் சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தின் சுவர் விளம்பர பணிகள் தீவிரமடைகிறது.. #கோவையில்_திரள்வோம்.! | #நீதியை_வெல்வோம்.! |#ReleaseLongTermPrisoners | #MJKITWING
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
ஜனவரி-08 கோவை சிறை முற்றுகை..! செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..!! 10 பேருந்துகள் உட்பட 30 வாகனங்களில் புறப்பட சூளுரை..!!
சென்னை.டிச.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8, 2022 அன்று, ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பின் கீழ், சாதி, மத வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது. மஜக-வின் சார்பில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணிகளும், வாகனங்களை முன்பதிவு செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டங்கள், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மஜக சார்பில் முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, கிளை செயலாளர்கள் பங்கேற்ற ஆயத்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஜாகிர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் துணை பொதுச் செயலாளர், N.A.தைமிய்யா அவர்களும், மாநில துணைச்செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி, மாநில இளைஞரணி செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தாரிக் ஆகியோர் பங்கேற்றனர். இதில் மாவட்டம் எங்கும் சுவர் விளம்பரங்களை அதிகமாக வரைவது என்றும், 10 பேருந்துகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட
ஜனவரி-08 கோவை சிறை முற்றுகை..!! மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..!! 7 பேருந்துகள் உட்பட 20 வாகனங்களில் புறப்பட சூளுரை..!!
சென்னை.டிச.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8, 2022 அன்று, ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பின் கீழ், சாதி, மத வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது. மஜக-வின் சார்பில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணிகளும், வாகனங்களை முன்பதிவு செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டங்கள், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக நேற்று (13.12.2021) மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக சார்பில் முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி, கிளை செயலாளர்கள் பங்கேற்ற ஆயத்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் துணை பொதுச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான N.A.தைமிய்யா அவர்களும் பங்கேற்றார். இதில் மாவட்டம் எங்கும் சுவர் விளம்பரங்களை அதிகமாக வரைவது என்றும், 7 பேருந்துகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட இதர வாகனங்களில் கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டத்திற்கு புறப்படுவது என்றும். அதற்காக மக்களைத் திரட்டும்
ஜனவரி-08 கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம்! கோவையில் மஜக மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம்! தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!
டிச:13., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 08ஆம் தேதி அன்று சாதி,மத, வழக்கு, பேதமின்றி 10.ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. அது தொடர்பான மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட அலுவலகத்தில் வைத்து கட்சியின் துணை பொதுச்செயலாளர் செய்யது அஹமது பாருக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை பொதுச்செயலாளர் A.K. சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் A.அப்துல் பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, Ikp மாநில செயலாளர் லேனா இசாக், ஆகியோர் பங்கேற்று சிறைச்சாலை முற்றுகை போராட்டம் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷானவாஸ், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மஜீத், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சுல்தான், கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், கோவை வடக்கு மாவட்ட பொருளாளர் சேக் மைதீன்,
ஜனவரி-08 கோவை முற்றுகை போராட்டம்! தென்காசி மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்.
டிச:13., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க தென்காசி மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அச்சன்புதூர் பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு தென்காசி மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அதம்பின் ஹனிபா, மாவட்ட துணை செயலாளர்கள் வாவை இனையத்துல்லா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன், வணிகர் அணி மாவட்ட செயலாளர் இஸ்மாயில், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரவி, இளைஞரணி மாவட்ட செயலாளர் சிக்கந்தர், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் அச்சன்புதூர் அன்வர், இளைஞரணி துணைச் செயலாளர் தர்வீஸ் மைதீன், சங்கரன் கோவில் நகர செயலாளர் சுல்தான், நகர பொருளாளர் சேக் முகம்மது, தென்காசி