சென்னை.டிச.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8, 2022 அன்று, ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பின் கீழ், சாதி, மத வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது.
மஜக-வின் சார்பில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணிகளும், வாகனங்களை முன்பதிவு செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டங்கள், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக நேற்று (13.12.2021) மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக சார்பில் முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி, கிளை செயலாளர்கள் பங்கேற்ற ஆயத்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
அவருடன் துணை பொதுச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான N.A.தைமிய்யா அவர்களும் பங்கேற்றார்.
இதில் மாவட்டம் எங்கும் சுவர் விளம்பரங்களை அதிகமாக வரைவது என்றும், 7 பேருந்துகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட இதர வாகனங்களில் கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டத்திற்கு புறப்படுவது என்றும். அதற்காக மக்களைத் திரட்டும் பணிகளை குழுக்கள் அமைத்து மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான ஆயத்த பணிகளில் கவனம் செலுத்துமாறும், சிறைவாசிகள் விடுதலையில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் அறிவுறுத்தினார்.
அடுத்தடுத்த ஆயத்த நிகழ்வுகள் குறித்து துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா அவர்கள் பேசினார்.
இதில் மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன், IKP மாவட்ட செயலாளர் லத்தீப், மாவட்ட பொருளாளர் ரோஃபி பாஷா, மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம் ஆகிய பகுதிகளின் செயலாளர்கள், மற்றும் கிளைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்தியசென்னை_கிழக்கு_மாவட்டம்
13.12.2021