ஜனவரி-08 கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம்! மேதா பட்கருக்கு நேரில் அழைப்பு விடுத்து பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு!

சென்னை.டிச.13., பிரபல சமூக செயற்பாட்டாளரும், நாடறிந்த போராட்ட வாதியுமான திருமதி. மேதா பட்கர் அவர்கள் இன்று சென்னை வருகை தந்தார்.

இன்று அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்துப் பேசினார் அப்போது அவருடன் துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்களும், மாநில துணைச் செயலாளர் பல்லாவரம் ஷஃபி அவர்களும் உடன் இருந்தனர்.

10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் ஜாதி, மத பேதமின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்வது குறித்தும், மஜக முன்னெடுக்கும் போராட்டம் குறித்து அவரிடம் பொதுச்செயலாளர் விளக்கினார்.

ஜனவரி-8 2022 அன்று கோவையில் மஜக முன்னெடுக்கும் கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்தார்.

மாநில இளைஞரணி செயலாளர் முகமது அசாருதீன், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் தாம்பரம் தாரிக் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இச்சந்திப்பின்போது சுப.உதயகுமார், இனிகோ இருதயராஜ் MLA., ஆகியோரும் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
13.12.2021