ஜனவரி-08 கோவை சிறை முற்றுகை..! செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..!! 10 பேருந்துகள் உட்பட 30 வாகனங்களில் புறப்பட சூளுரை..!!

சென்னை.டிச.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8, 2022 அன்று, ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பின் கீழ், சாதி, மத வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது.

மஜக-வின் சார்பில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணிகளும், வாகனங்களை முன்பதிவு செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டங்கள், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மஜக சார்பில் முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, கிளை செயலாளர்கள் பங்கேற்ற ஆயத்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஜாகிர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

அவருடன் துணை பொதுச் செயலாளர், N.A.தைமிய்யா அவர்களும், மாநில துணைச்செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி, மாநில இளைஞரணி செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தாரிக் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் மாவட்டம் எங்கும் சுவர் விளம்பரங்களை அதிகமாக வரைவது என்றும், 10 பேருந்துகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட இதர வாகனங்களில் கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டத்திற்கு புறப்படுவது என்றும். அதற்காக மக்களைத் திரட்டும் பணிகளை குழுக்கள் அமைத்து மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான ஆயத்த பணிகளில் கவனம் செலுத்துமாறும், சிறைவாசிகள் விடுதலையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் அறிவுறுத்தினார்.

அடுத்தடுத்த ஆயத்த நிகழ்வுகள் குறித்து துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா அவர்கள் பேசினார்.

இதில் மாவட்ட பொருளாளர் தில்சாத், மாவட்ட துணைச் செயலாளர் ECR அப்துல் சமது, கன்டோன்மென்ட் அப்துல் சமது, இளைஞரணி மாவட்ட செயலாளர் முஸ்தபா மற்றும் சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், ஆகிய நகரங்களின் செயலாளர்கள் மற்றும் கிளைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#செங்கை_வடக்கு_மாவட்டம்
13.12.2021