தூத்துக்குடி,மார்ச்.20., காயல்பட்டிணம் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடத்தை அகற்ற வலியுறுத்தி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு KC.கருப்பணன் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து விளக்கிக்கூறினார். அதனை தொடர்ந்து அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் N.M.தமிமுல் அன்சாரி, மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் K ராஸிக் முஸம்மில் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம். 20.03.2017
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
காயல்பட்டிணம் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத கட்டிடத்தை அகற்றக்கோரி மஜக MLA விடம் கோரிக்கை மனு…
தூத்துக்குடி, மார்ச்.20., காயல்பட்டிணம் கடற்கரையில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடத்தை அகற்றக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமையகத்தில் சந்தித்து பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MA MLA அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அவருடன் மாநில பொருளாளர் S.S ஹாரூன் ரஷிது மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் உடன் இருந்தனர். இம்மனுவை காயல்பட்டணத்தை சார்ந்த தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் N.M தமிமுல் அன்சாரி, மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் K ராஸிக் முஸம்மில் ஆகியோர் காயல்பட்டிணம் நகரத்தின் சார்பாக கோரிக்கை மனுவை வழங்கினார்கள் தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம் 20.03.2017
வழுத்தூரில் மஜகவின் முயர்ச்சியால் குப்பைக் கழிவுகள் அகற்றம்…
கும்பகோணம்.மார்ச்.16., வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) ஆரம்பப்பள்ளி அருகில் நீண்ட நாள் தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகளால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதனை அறிந்த மஜகவின் மாவட்ட செயலாளர் வழுத்தூர் P.முஹம்மது சேக் தாவூத் அவர்கள் குப்பைகள் எடுக்க விட்டால், வழுத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அனைத்து குப்பைகளையும் கொட்டி போரட்டாம் நடத்தப்படும் என்று மஜக வழுத்தூர் கிளை சார்பில் அறிவித்தார்கள். அறிவித்த ஒரு சில நிமிடத்தில் வழுத்தூர் ஊராட்சி CLERK அறிவழகன் அவர்கள் சம்பவ இடத்திக்கு வருகை தந்து, குப்பைகளை உடனே அகற்றி விடுகின்றோம் என்று வாக்குறுதி தந்து போரட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததின் பேரில் போரட்டாம் கைவிடப்பட்டது. துரிதமாக செயல்பட்டு குப்பைகள், கழிவுகளை அகற்ற உறுதுணையாக இருந்த மஜக வழுத்தூர் கிளை நிர்வாகிகள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தஞ்சை வடக்கு மாவட்டம். 16/3/2017
நாகை மீனவர்கள் உண்ணாவிரதம்… அமைச்சர்களுடன் நாகை MLA நேரில் வருகை!
நாகை. மார்ச்.14., நாகப்பட்டினத்தில் 5 மாவட்ட மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை அரசுக்கு எதிராகவும், மீனவர்களின் படகுகளை மத்திய அரசு மீட்டுத்தரக் கோரியும், அவர்கள் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். இன்று (14.3.17) மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், O.S. மணியன், நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி ஆகியோர் நேரில் சென்று மீனவ தலைவர்களுடன் உரையாடினர். அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் மீனவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம், தமிழக அரசு கண்டிப்பாக வலியுறுத்தும் என்று கூறினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
மதுக்கடையை அகற்ற கோரி மஜக மனு!
ஈரோடு. மார்ச்.14., ஈரோடு மேற்கு மாவட்டம் பவாணியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்துவரும் டாஸ்மாக் மதுபான கடையை (எண் 3408) அகற்ற கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் டாஸ்மாக் மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING ஈரோடு மேற்கு மாவட்டம்