(#மஜக பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)
இந்தியாவின் முதல் பிரதமர்,சுதந்திர போராட்ட தலைவர், சமதர்ம சிந்தனையாளர்,சிறந்த பேச்சாளர்,கூர்மையான எழுத்தாளர்,மதர்ச்சான்பின்மையின் அடையாளம் என பண்டிதர்.ஜவஹர்லால் நேருவை வரலாறு போற்றுகிறது.
காந்தியாரின் நம்பிக்கைக்குரிய தலைவராக திகழ்ந்ததாலேயே ,அவரை நாடு சுதந்திரமடைந்த இக்கட்டான காலக்கட்டத்தில் முதல் பிரதமராக்கினார்.
அணி சேரா கொள்கைகளின் மூலமாக உலக அளவில் பிரபலமான நேரு ஜி அவர்கள் , ஐந்து ஆண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டார்.
அமைதியும், சமூக நீதியும்,வளமும் கொண்ட இந்தியாவை உருவாக்க அரும்பாடுபட்டார்.
நேருவின் கனவுகளைத்தான்,பின்னாளில் திரு V.P சிங் அவர்கள் பிரதமர் பதவியிலிருந்து நிறைவேற்ற பாடுபட்டார்.
அவர் எழுதிய DISCOVERY OF INDIA,மற்றும் மகள் இந்திராவுக்கு கடிதங்கள் ஆகிய நூல்களை வாசித்தப்போது அவரது உலக அறிவும்,அரசியல் பார்வையும் என்னை வியக்க வைத்தது.
காந்தியாரும்,அபுல் கலாம் ஆசாத்தும் ஏன் அவரை கொண்டாடினர் என்பதை புரிய முடிந்தது.
நேருவின் கரங்களில் சமூக நீதியும்,மதச்சார்பின்மையும் பாதுகாப்பாக இருந்தது.
இன்று அவரின் 128 வது பிறந்த நாளை நாடு குழுந்தைகள் தினமாக கொண்டாடுகிறது.
நேரு இப்போதும் நமக்கு தேவைப்படுகிறார்! குழந்தைகளின் வழியே நேருவின் கொள்கைகளை வளர்த்து எடுப்போம்.
இது நேரு வழிநடத்திய நாடு என்பதை சொல்லிகொடுப்போம்!