தூத்துக்குடி.டிச.07., தூத்துக்குடி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாபர் மஸ்ஜீத் வழக்கில் நீதியான தீர்ப்பை விரைந்து வழங்கக்கோரி நேற்று மாலை 4 மணியளவில் மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டனஆர்ப்பாட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருலாளர் நவாஸ், மா.து.செயலாளர்கள் காதர்பாட்ஷா, நஜீப், மா.இ.அணி செயலாளர் ராபிக், மா.தொ.அணி செயலாளர் ராசிக் முசம்மில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். தோழமை அமைப்புகளைச் சார்ந்த அகமது இக்பால் (விசிக), சுஜித் (பு.இ.மு) அவர்களும் மஜகவின் அழைப்பை ஏற்று வருகைதந்து தங்கள் கண்டனத்தை பதிவுசெய்தனர். மாலை 3.30 மணிக்கே மழைபெய்ய ஆரம்பித்த சூழ்நிலையிலும் 300க்கும் மேற்ப்பட்ட நபர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இருதியாக தூத்துக்குடி நகர இளைஞரணி செயலாளர் சுலைமான் நன்றியுரையாற்றினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தூத்துக்குடி_மாவட்டம் 06.12.17
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
திருச்சி மஜக சார்பில் டிசம்பர்-6 இரயில் நிலையம் முற்றுகை போராட்டம்..!
திருச்சி.டிச.7., பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி டிசம்பர்6 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் நேற்று இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள், ஜனநாயக அமைப்புகள், பிரநிதிகள் கலந்து கொண்டார்கள். மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இணைப் பொதுச்செயலாளர் K.M.மைதீன் உலவி அவர்களும், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் தோழர்.பெரியார் சரவணன் அவர்களும் கண்டன உரையை பதிவு செய்தார்கள். இதுதவிர மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா, மருத்துவ சேவை அணி மைதீன் அப்துல்காதர் உரையாற்றினார்கள். போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் R அஸ்ரப்அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திருச்சிசேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் SM. ரபிக், சேக்தாவூத் ஜம்ஜம் பஷிர் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் MJVS மாவட்ட செயலாளர் அப்துல்லாஹ், இளைஞரணி செயலாளர் தென்னூர் சதாம், MJTS செயலாளர் GK.காதர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் புரோஸ்கான் முன்னிலை வகித்தனர். மேலும் ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா தர்கா,
பாபர் மஸ்ஜீதை அதே இடத்தில் கட்ட வேண்டும்..! மஜக போராட்டத்தில் திருமுருகன் காந்தி எழுச்சியுரை…!!
திருவள்ளூர். டிச.07., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக நேற்று டிசம்பர்-6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்திய மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் பாபர் மஸ்ஜீத் இடிப்பு ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட கடும் இழிவு என்றும், இனி பாபர் மஸ்ஜீத் மீட்பதில் உச்சநீதி மன்றம் சட்டப்படி தீர்ப்பு வழங்கினால் மட்டுமே நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்றும்.டிசம்பர்6 நிகழ்வை சட்டம் இயற்றிய அம்பேத்கரின் மறைவோடு நீதியை புதைத்துவிட வேண்டாமென்று கூறினார். மஜக கொள்கை விளக்க அணி செயலாளர் அப்துர் ரஹ்மான் பாஸிச சக்திகளுக்கு சவால்விடும் வகையில் உரையாற்றினார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் போராட்ட களத்திற்கு வந்த தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் டிசம்பர்-6ல் பங்குபெற்று நான் உரையாற்றுவது எனது தொப்புள்கொடி உறவுகளுக்கு என்றும் தோள் கொடுத்து நாங்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் இந்தியர்கள் என்பதை நாடறிய உணர்த்துவோம் என்றார். மேலும் பாபர் மஸ்ஜீத் இடத்தை அதே இடத்தில் கட்ட வேண்டும் அது மட்டுமல்லாமல் சர்ச்சார் கமிட்டியின் இட
வாணியம்பாடி மஜக சார்பில் டிசம்பர்-6 இரயில் நிலையம் முற்றுகை போராட்டம்..! பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று கண்டன உரை..!!
வேலூர்.டிச.7., பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி டிசம்பர்-6 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மஜக சார்பில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகள், பிரநிதிகள் கலந்து கொண்டார்கள். நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மேற்கு மாவட்ட அமைப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் தலைமையில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர்கள் A. ஷாஹின்ஷா பாபு, J.M.வசிம் அக்ரம், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரபு , CPI மாவட்ட செயலாளர் சாமிகண்ணு, CPI(M) மாவட்ட செயற்குழு அருள் சீனிவாசன், விசிக மாவட்ட பொருளாளர் நெற்றிக்கண் ஹபீஸ், அன்வர் CPI, தாலுக்கா செயலாளர் இந்துமதி CPI(M), இன்சாப் மாநில துணை செயலாளர் ஆலியார் அத்தாவுல்லா அவர்களும் கண்டன உரையை பதிவு செய்தார்கள். இப்போராட்டத்தில் மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் M.ஜஹீருஸ் ஜமா, S.M.ஷாநவாஸ், P.M.ஷபியுல்லாஹ், சையத்ஜாவித், S.நயீம் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், பேர்ணாம்பேட், நகரத்தின் செயலாளர்கள், பொருளாளர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். தடையை மீறிய
திண்டுக்கல்லில் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்ற மஜகவின் டிச6 போராட்டம்..! கருணாஸ் MLA கலந்துகொண்டு எழுச்சியுரை.!!
திண்டுக்கல்.டிச.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் மத்திய அரசை கண்டித்தும், 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும் நீதி வழங்கபடாததை கண்டித்தும், லிபரான் அறிக்கையின் படி தண்டனை வழங்கக்கோரியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை11:30 மணியலவில் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமை ஏற்று இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போதைய நிலைமையை எடுத்து கூறினார். இதில் கண்டன உரையாற்ற வருகைபுரிந்த மாநில நிர்வாகிகள் மண்ணை செல்லச்சாமி மற்றும் திண்டுக்கல் M.அன்சாரி இருவரில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்ணை செல்லச்சாமி அவர்கள் கூறும்போது பாபர் மசூதியின் வரலாற்றை பற்றியும் அது யாரால் கட்டப்பட்டது என பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பார்வையாளர்கள் வியக்கும் வகையில் கண்டன உரையாற்றினார். இந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டத்துக்கு சிறப்புரை ஆற்ற வருகை தந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA அவர்கள் பாபர் மசூதி வழக்கில் முஸ்லீம்களுக்கு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டு வறுவதை சுட்டிக்காட்டி நியாயமான நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் ஒயாது என்றும் கூறினார். மேலும் அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்க்கு தடை விதித்த போது அந்த தடைக்கு