#M_L_A_அவர்களுக்கு... #நாகை_தொகுதி_மக்கள் #நன்றி! பிப்.03., காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு எதிராக சட்டசபையில் பேசியதற்கு நாகை தொகுதி மக்கள் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு தொடர்ந்து நன்றிகளையும், பாராட்டுகளையும் நேரிலும், அலைபேசியிலும் தெரிவித்து வருகின்றனர். இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் வந்து MLA அவர்களை நாகூர் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் நாகூர் சமூக ஆர்வலர்கள் அமைப்பு ஆகியவற்றை சேர்ந்தவர்கள் நன்றி பாராட்டினர். இன்று நாகூர் செய்யது பள்ளிக்கு ஜும்மா தொழுகைக்கு சென்ற போது அங்கும் நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் செய்யது பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பாராட்டி சால்வை அணிவித்தனர். பனங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. நந்தினி முத்தழகன் சார்பில் நன்றி தெரிவித்து, பாராட்டி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது. அதுபோல் பட்டினச்சேரி மீனவ மக்களும் நேரில் வந்து நன்றி கூறினர். நாகூர் முஸ்லிம் சங்கம், தர்கா ஆலோசனைக்குழு, வர்த்தக சங்க தலைவர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், கேபிள் டி.வி. சங்க நிர்வாகிகள், வெளிநாடு வாழ் நண்பர்கள் மற்றும் முன்னாள் ஜமாத் நிர்வாகிகள் சார்பாக வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 03.01.17
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
E.அஹ்மத் உடல் அடக்கம்! பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
பிப்.02., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர் E.அஹ்மத்வின் உடல் நேற்று டெல்லியிலிருந்து கோழிக்கோடு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் வருகை தந்து மரியாதை செய்தனர். இன்று காலை கண்ணூர் ஜாமியா மஸ்ஜிதில் அவரது உடல் நண்பகல் 12 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். அவருக்கான இறுதி தொழுகையில் தமிழகத்திலிருந்து பேரா.காதர் மெய்தீன், அபூபக்கர் MLA, அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட IUML தலைவர்களும், தொண்டர்களும் கலந்துக் கொண்டனர். மஜக சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இறுதித் தொழுகையில் பங்கேற்று, IUML தலைவர்களுடன் ஆறுதலை பகிர்ந்துக் கொண்டார். கொச்சின் வழியாக இரயிலில் புறப்பட வேண்டியிருப்பதால் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்பதை லீக் தலைவர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டார். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT Wing) 02-02-2017
சட்டசபை வளாகத்தில் கோக், பெப்சிக்கு எதிராக விழிப்புணர்வு பதாகை! M.தமிமுன் அன்சாரி MLA முன்முயற்சி!
பிப்.02., நேற்று தமிழக சட்டசபைக்கு வந்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அவைக்கு நுழைவதற்கு முன்பு "2017, பிப்ரவரி 1 முதல் கோக், பெப்சி குடிப்பதை நிறுத்திவிட்டேன். வணிகச் சங்கங்களின் கோரிக்கை வெல்லட்டும்" என்ற பதாகையோடு வந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டம் நடத்தியப்போது பெப்சி, கோக் பானங்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டார்கள். அதன் விளைவாக மார்ச் 1 முதல் வணிகர் சங்கங்கள் இனி பெப்சி, கோக் விற்கக்கூடாது என வணிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். அதை ஆதரிக்கும் விதமாக, இன்று எனது நிலைபாட்டை தெரிவித்தேன் என்று கூறினார். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT Wing)
உங்களின் கரங்களை பிடித்து கொண்டு, கண்ணீரோடு அழுவதாக எடுத்துக்கொள்ளுங்கள்!
#சிறைவாசிகள்_விடுதலை #குறித்து #மஜக_பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA #சட்டசபையில் #உருக்கமாக #வேண்டுகோள்! மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பெரும் மரியாதைக்குரிய பொன்மனச் செம்மல் ஐயா எம்.ஜி.ஆர். அவர்களுடைய நூற்றாண்டு விழாக் காலம் இது. தமிழக அரசு சிறப்பான முறையிலே இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்திலே மிகுந்த தாழ்மையோடு ஒரு கோரிக்கையை இந்த அவையிலே முன் வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். எனக்கு முன்பாக அண்ணன் திரு.தனியரசு, சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் 14 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மத அரசியல் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். அந்தக் கருத்தை நான் ஏற்கனவே இந்த அவையிலே தெளிவாக வலியுறுத்தியிருக்கின்றேன். நான் அதை மீண்டும் இப்போது வலியுறுத்துகின்றேன். மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் தலைமையில் இந்தப் புதிய அவை அமைந்த பிறகு, வெற்றிபெற்ற பிறகு, நான்கு முறை நான் அவர்களை சந்தித்திருக்கின்றேன். அதிலே, இரண்டு முறை 14 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென்று நான் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன். நிச்சயமாக பரிசீலிப்பதாக சொன்னார்கள். கடைசியாக, அவர்கள் இந்த அவையிலே பேசிவிட்டு சென்ற பிறகு,
மாணவர்களின் போராட்டம் தமிழர்களின் வசந்த காலம்!
சட்டமன்றத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உரை! (நேற்றைய சட்டமன்ற உரையின் முக்கிய பகுதி) ஜல்லிகட்டுக்காக நம்முடைய மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய ஒரு சிறப்பான போராட்டத்தை நான் மனதார வரவேற்று பாராட்டுகிறேன். அவர்கள் நடத்திய போராட்டம் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஒரு சிறப்பான சட்டத்தை மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு நிறைவேற்றக்கூடிய ஒரு வாய்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அரசியலை ஒதுக்கி, பொதுவாழ்வின் மீது அக்கறையில்லாமல் விலகிக்கொண்டிருந்த ஒரு புதிய தலைமுறையினர் பொதுவாழ்வுக்கு வந்திருக்கின்றனர், அரசியலுக்கு வந்திருக்கின்றனர். துனிசிய புரட்சியை, எகிப்து புரட்சியை அரபு வசந்தம் என்று வர்ணித்தார்கள். அதுபோன்று நம்முடைய மாணவர்களும், இளைஞர்களும் நம்முடைய இனம் காக்க, மொழி காக்க, மாநிலத்தின் உரிமைகளைக் காக்க நடத்திய இந்தப் போராட்டத்தை நான் 'தை புரட்சி' என்று வாழ்த்துகின்றேன். இது தமிழர்களுடைய வசந்த காலம் என்று வாழ்த்துகின்றேன். அந்தப் போராட்டத்திலே ஒழுங்குகள் இருந்தன. என்னவென்று சொன்னால், நடிகை நயன்தாரா வந்தார், எந்தவொரு மாணவரும் அங்கே நயன்தாராவுடன் செல்பி எடுக்கவில்லை. இது அந்த போரட்டத்தினுடைய ஒரு சிறப்பாக நான் கருதுகிறேன். அங்கே நடிகர்கள் வந்தார்கள், நடிகர்களோடு போட்டிப்போட்டு கொண்டு யாரும் செல்பி எடுக்கவில்லை. அப்படிபட்ட ஒழுக்கம் அந்தப் போராட்டத்திலே இருந்தது.