பிப்.02., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர் E.அஹ்மத்வின் உடல் நேற்று டெல்லியிலிருந்து கோழிக்கோடு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் வருகை தந்து மரியாதை செய்தனர்.
இன்று காலை கண்ணூர் ஜாமியா மஸ்ஜிதில் அவரது உடல் நண்பகல் 12 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர்.
அவருக்கான இறுதி தொழுகையில் தமிழகத்திலிருந்து பேரா.காதர் மெய்தீன், அபூபக்கர் MLA, அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட IUML தலைவர்களும், தொண்டர்களும் கலந்துக் கொண்டனர்.
மஜக சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இறுதித் தொழுகையில் பங்கேற்று, IUML தலைவர்களுடன் ஆறுதலை பகிர்ந்துக் கொண்டார்.
கொச்சின் வழியாக இரயிலில் புறப்பட வேண்டியிருப்பதால் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்பதை லீக் தலைவர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டார்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT Wing)
02-02-2017