(பகுதி_3) முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதார, வாழ்வியல் குறித்த தனது ஆய்வறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்பித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவற்றை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் அது எந்த அளவுக்கு செயல் படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு விரிவான அறிக்கையை நமது அம்மா அவர்களின் அரசு வெளிப்படுத்தினால்,அது பயனுள்ளதாக இருக்கும். மேலும் அதில் equal opportunity commission, அமைக்கப்பட வேண்டும் என நீதியரசர் சச்சார் அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார். எனவே, நீதியரசர் சச்சார் அவர்களின் பரிந்துரைப்படி தமிழ்நாட்டில் அத்தகைய ஆணையகத்தை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு அமைக்க முன் வரவேண்டும் என்று பேரவை தலைவர் வழியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். #இட_ஒதுக்கீடு இட ஒதுக்கீடு 3.5% முறையாக எல்லா துறைகளிலும் அமல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 24_03_17
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
பல்கலைக்கழகங்களில்_சமூக_நீதி!
(இன்று சட்டமன்றத்தில் M.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையின் ஒரு பகுதி) பேரவை தலைவர் அவர்களே.... தமிழ்நாட்டில் 21 பல்கலைக்கழகங்களில் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லை.8 பல்கலைக்கழகங்களில் பதிவாளர் இல்லை.10 பல்கலைக்கழகங்களில் தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் (exam controller) இல்லை. இதில் சமூக நீதி பேணப்பட வேண்டும்.இது சமூக நீதியை மதிக்கும் அம்மாவின் அரசு.எனவே முஸ்லிம்களுக்கும்,கிறித்தவர்களுக்கும்,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் உரிய ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும். என கேட்டுக் கொள்கிறேன். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 23_03_17
சிறைவாசிகளை விடுதலை செய்க! சட்டமன்றத்தில் மீண்டும் தமிமுன் அன்சாரி MLA_பேச்சு!
சட்டமன்ற உரை : பேரறிவாளன் தாயார் வீரமங்கை #அற்புதம்மாள் அவர்கள் இரு தினங்களுக்கு முன்பாக பேரறிவாளனின் விடுதலை குறித்து நமது முன்னாள் #முதல்வர்_அம்மா அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை இந்த அவைக்கு நினைவூட்டி, மனிதாபிமான அடிப்படையில் அவரின் விடுதலைக்கு நாம் உதவிட முயற்ச்சிகளை எடுக்க வேண்டும். 14 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனைக் கைதிகளை, சமூக வழக்குகள் உட்பட எந்த வழக்கில் தண்டனைப் பெற்றிருந்தாலும், சாதி, மத, அரசியல் பேதமின்றி அவர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பாஷா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 23_03_17
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டிடிவி.தினகரன் அறிமுக நிகழ்ச்சி…
சென்னை.மார்ச்.22., ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்களை அறிமுக செய்யும் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தோழமை கட்சியின் தலைவர்களும் பங்குபெற்றார்கள்.அதில் டி.டி.வி.தினகரன் அவர்களை அறிமுகப்படுத்தி மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி_MLA ,அவர்கள் உரையாற்றினார்கள். மனிதநேய ஜனநாயக கட்சி அவரது வெற்றிக்கு இத்தொகுதியில் சிறப்பாக பணியாற்றும் என்பதையும் பலத்த கைத்தட்டலுக்கு இடையே அறிவித்தார்கள். மேடையில் முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி அவர்கள் பொதுச்செயலாளரிடம் பேசும்போது இத்தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியினுடைய சிறப்பான களப்பணியை தாம் அதிகம் எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.அதேபோன்று வேட்பாளர் டி.டி.வி.தினகரன் அவர்களும் இத்தொகுதியில் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை அதிகமாக பிரச்சாரத்திற்கு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இவண், ஆர்.கே.நகர் தொகுதி மஜக தேர்தல் பணிக்குழு
தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு ஜமால் முகமது கல்லூரியில் உற்சாக வரவேற்பு…
புகழ்பெற்ற திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், இன்று (21-3-2017) வரதட்சணைக்கு எதிராக மாணவ-மாணவிகள் நடத்திய நிகழ்ச்சியில் #மஜக_பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி_MLA கலந்து கொண்டு உற்சாக உரையாற்றினார். பறை முழக்கம், சிலம்பாட்டம் ஆகியவற்றுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. காணொளி காட்சி தொகுப்பு பிறகு "எதிரொலி" நூல் வெளியீடு புதுமையான கலை நிகழ்வோடு நடைப்பெற்றது.விரசம் இல்லாமல் நாகரீகத்தோடு மாணவிகளின் நிகழ்ச்சி அமைப்பு அரங்கேறியது. மாணவிகள் எழுந்து வரதட்சணைக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர். பிறகு 1500 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மத்தியில், அவர்களின் ஆரவாரத்திற்க்கிடையே #தமிமுன்_அன்சாரி_MLA உரையாற்றினார். அவருக்கு முன்னுரை கொடுத்த பேராசிரியர்கள் அவரை பேச அழைத்த போது மாணவிகள் கைதட்டி ஆரவாரம் எழுப்பினர். கவிதை, இலக்கியம், தன்னம்பிக்கை, முன்னேற்றம், வரதட்சணை கொடுமைக்கு எதிரான முழக்கம், பெண்ணியம், கல்லூரி வாழ்க்கை என படு சுவாரசியமாக அவரது உரை அனைவரையும் கவர்ந்தது, கைதட்டல் அரங்கை அலற வைத்தது. பிறகு 7 மணிக்கு விடுதி மாணவர்களுக்கு மத்தியில், #தமிமுன்_அன்சாரி_MLA பேருரையை நிகழ்த்தினார். அவரை இன்றைய இளைஞர்களின் எழுச்சி நாயகர் என்று மாணவர்கள் அறிமுகப்படுத்தி பேச அழைத்த போது மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். கல்லூரி வாழ்க்கையை வசந்த காலம் என்று அதன் சுவையை அனுபவப்பூர்வமாக விவாரித்த போது மாணவர்கள் உற்சாகம்