சென்னை.டிச.08.,தமிழக முதல்வர் திரு எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அவரது கீரீன்வேஸ் சாலை இல்லத்தில் நேற்று இரவு சந்தித்தார். முத்தலாக் குறித்து மத்திய அரசு கொண்டுவர உள்ள விரைவு சட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று மஜகவின் சார்பில் முதல்வரிடம் கடிதத்தை கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த முதல்வர் நிச்சயமாக தமிழக அரசு சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று உறுதியளித்தார். அடுத்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அங்கு நடைபெறும் போராட்டங்களை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் மஜக பொதுச் செயலாளர் கூறினார். இதுகுறித்து முதல்வர் தமிழக அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறினார். தற்போது குஜராத்தில் ஓகி புயலால் கரை ஒதுங்கியுள்ள குமரி மாவட்ட மீனவர்களை விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றும், அவர்கள் திரும்பி வர ஒரு படகிற்க்கு 750 லிட்டர் டீசல் வழங்கப்படும் என அரசு அறிவித்ததை 1500 லிட்டர் டீசலாக உயரத்தித் தர வேண்டும் என்றும், அவர்களுக்கு நபர் ஒன்றுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டதை கூடுதலாக உயர்த்தித் தர
நாகப்பட்டிணம்
நாகை தெற்கு மஜக சார்பில் இரயில் நிலைய முற்றுகை போர். .! கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி சகோதரர்கள், மஜக சகோதரர்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!!
நாகை. டிச.06., பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் ரயில் நிலைய முற்றுகைப் போர் எழுச்சியோடு நடைப்பெற்றது. இதில் பல்வேறு மதங்களை சேர்ந்த பொதுமக்களும, சமூக நீதி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும், பிரநிதிகளும் பங்கேற்றனர். நாகை தெற்கு மாவட்ட மஜக சார்பில் நாகை இரயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராடத்திற்கு மாவட்டச் செயலாளர் செ.செய்யது ரியாசுதீன் அவர்கள் தலைமை வகித்தார். மஜக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் மௌலவி. ஜெ.எஸ். ரிஃபாயி அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில கட்டுபாட்டுக்குழு உறுப்பினர் பாண்டியன், திராவிட கழக மாவட்ட செயலாளர் புபேஸ் குப்தா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிவானந்தம், அப்துல் கலாம் பேரியக்கம் நிறுவனர் பாரதி.செந்தமிழன் ஆகியோர் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள். இப்போராட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட
நீங்காத நினைவுகள்! மஜகவின் மீது அன்புக் காட்டியவர் அம்மா…!
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) கடந்த வருடம் இதே நாளில் (04/12/2017) சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றிருந்தேன், அங்கு என்னோடு ஹாரூன், நாசர், மைதீன் உலவி, செல்லச்சாமி ஆகியோரும் இருந்தனர். மாலை 6 மணியளவில் தொலைக் காட்சிகளில் பரபரப்பான செய்தி ஒடியது. அப்பபோலோவில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வர பரபரப்பு தொற்றியது. அந்த திருமண நிகழ்வு மாலை 7 மணியளவில் நடந்தது. அதற்கு மானாமதுரை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கென்னடி மாரியப்பன் வந்திருந்தார். கோயிலுக்கு சென்று பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தலைமையகத்திலிருந்து உத்தரவு வந்ததாக கூறி, உடனே புறப்பட்டார். நேரம் ஆக, ஆக தொலைக்காட்சிகளில் விவாதங்கள் உருவாகிறது. நாங்கள் அனைவரும் மிகுந்த கவலையடைந்தோம். தொலைக்காட்சிகள் என்னிடம் அலைப்பேசி வழியாக பேட்டி அடுத்து நேரலையாக ஒளிப்பரப்பினார்கள். அதுபோல பல தலைவர்களிடமும் நள்ளிரவு வரை பேட்டி எடுத்துக்கொண்டே இருந்தார்கள். அன்று இரவுப் பொழுது கழிந்து, காலை விடிந்ததும் பத்திரிக்கைகளிலும் இதுதான் தலைப்புச் செய்தி. நாங்கள் பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 அன்று போராட்டத்தை அறிவித்திருந்தோம். தமிழக முதல்வரின் உடல் நலமும்,
தேங்கிய மழைநீரை அகற்ற துரித நடவடிக்கை! MLA நேரில் ஆய்வு…
கடந்த நான்கு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்த வரும் நிலையில், நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மற்றும் நாகூரில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அவற்றை துரிதமாக வெளியேற்ற தமிமுன் அன்சாரி MLA அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 19 வது வார்டில் தேங்கி இருக்கும் மழை நீரை நேரில் வந்து பார்வையிட்ட MLA அவர்கள், அவற்றை துரிதமாக 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அருகில் இருந்த கோயிலுக்கும் சென்று மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அங்கு இருந்த மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். தகவல்:- நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 04.12.17
பற்றி எரிகிறது டிசம்பர் புரட்சி!..! நாகை வடக்கு மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் மமகவிலிருந்து விலகி மஜகவில் இணைந்தனர்!
நாகை.டிச.03., நாகை வடக்கு மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஒன்றியத்தை சேர்ந்த கொள்ளிடம், துளச்சேந்திரபுரம், திருமுல்லைவாசல், வடகால், தைக்கால், கீரா நல்லூர், புதுப்பட்டிணம் ஆகிய ஊர்களை சேர்ந்த மமக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சி நடைப்பெற்ற தைக்கால் கிராமத்திற்கு 3 KM முன்னதாக ஏராளமான கார்களிலும், 100 க்கு மேற்பட்ட பைக்குகளிலும் மஜக தொண்டர்கள் கொடிகளுடன் பொதுசெயலாளரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். வழி எங்கும் வாகன ஊர்வலத்தை நூற்றுகணக்கான பொதுமக்கள் சாலைகள் ஒரங்களில் கை அசைத்து வரவேற்றனர். தைக்கால் கிராமத்தில் வீரியமான மஜக முழங்கங்களோடு மஜக கொடியை பொதுச்செயலாளர் ஏற்றி வைத்தார். மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்ற இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் ராசுதீன், மாவட்ட செயலாளர் N.M.மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான் மற்றும் ஏராளமான மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் உடன் இருந்தனர். தகவல்; #தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாகை_வடக்கு_மாவட்டம்