திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 12-08-2016 பூவிருந்தவல்லியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆணையூர் அக்பர் உசேன் தலைமை வகித்தார் .பூவிருந்தவல்லி நகர செயலாளர் பூவை. யாசர் அராபத் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட துணை செயலாளர் பக்ருதீன்,தலைமை கழக பேச்சாளர் பூவை அப்துல் காதர் மஜக பணிகள் குறித்தும் இந்த சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். அடுத்து பேசிய மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கையும் புதிய கல்வி கொள்கையின் பாதகங்களை விளக்கினார். நிறைவுரையாற்றிய பொதுச் செயலாளர் #தமிமுன்_அன்சாரி அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி கடந்து வந்த பாதை குறித்து விரிவாக விளக்கினார். மேலும் பிற சமூக மக்களோடு எவ்வாறு ஒருங்கிணைந்து பழக வேண்டும் எனவும் கட்சியினை உற்சாகத்துடன் எவ்வாறு வைத்து கொள்ள வேண்டும். எனவும் எடுத்துரைத்தார் . பொது செயலாளரின் உரை அரங்கில் குழுமியிருந்த மாற்று மத நண்பர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது . இறுதியாக பூவை நகர பொருளாளர் அஜ்மல் கான் நன்றியுரை கூறினார். தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)
Author: admin
தேசிய கல்விக் கொள்கை ஆபத்தானது! சட்டமன்றத்தில் எம்.தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ உரை
(கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையில் ஒரு முக்கிய பகுதி (9.8.2016) ) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே..... மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கனிவான கவனத்திற்கு மிக முக்கியமான விஷயத்தை இத்தருணத்தில் எடுத்து கூற விரும்புகிறேன். இந்தியாவிலேயே சமூக நீதிக்கும், பின் தங்கிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முன் மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது. ஒன்றுபட்ட இந்திய திருநாட்டில் "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற முழக்கத்தோடு வாழ்ந்து வருகிறோம். "மத்தியில் கூட்டாச்சி - மாநிலத்தில் சுயாட்சி" என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கை மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற கருத்தை வலிமைபடுத்துவதில் பயணித்தது. பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப்படி மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதிலும், மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக்கூடாது என்பதிலும் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உறுதியாக இருக்கிறார் என்பது உண்மை. முன்பு, மாண்புமிகு அம்மா அவர்கள் ராஜிய சபாவில் பேசிய கன்னிப் பேச்சு சிறப்பு வாய்ந்தது. அண்ணாவின் எண்ணங்களை எதிரொலிக்கும் வகையில் இருக்கிறது. எங்கள் மாநிலத்திற்க்கு POWER வேண்டும் என்றும் "POWER" வேண்டும் என்றும் பேசினார்கள். அதாவது மின்சாரம் வேண்டும்
சர்வதேச இளைஞர் தினம் : மஜக இளைஞர் அணி சார்பில் மரக்கன்று நடல், சைக்கிள் ஊர்வலம்
ஆக.12., இன்று சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி சார்பில் இன்று சென்னை திருவல்லிக்கேணி தாயார் சாஹிப் தெருவில் உள்ள அரசினர் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் #மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி மரக்கன்றை நட்டு மாணவ_மாணவிகளிடம் உரையாற்றினார். தொடர்ந்து மரக்கன்றுகளை மஜக பொருளாளர் #ஹாரூன்_ரஷீது,மாநில செயலாளர் சாதிக் பாஷா,இளைஞரணி மாநிலச் செயலாளர் ஷமீம் ஆகியோர் நட்டனர். பிறகு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை முன்னிறுத்தி சைக்கிள் ஊர்வலம் நடைப் பெற்றது.போக்குவரத்து நெரிசல் மற்றும் காலை நேர வாகன நெருக்கடி காரணமாக காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையுடன் காவல்துறை அனுமதி அளித்தது. பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது கொடியசைத்து சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் M.தமிமும் அன்சாரி தலைமையில் சுற்றுச்சூழல் பதாகைகளுடன் சைக்கிள் ஊர்வலம் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் வரை நடைபெற்றது. தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)
500 பசுக்கள் செத்ததற்காக ராஜஸ்தான் முதல்வரை கட்டி வைத்து அடிப்பீர்களா? சூடேற்றிய மாணவர் இந்தியா கருத்தரங்கம்…
மாணவர் இந்தியா சார்பில் நேற்று 9.8.2016 சென்னையில் " #மாட்டுக்கறியும்_பாஸிஸ_அரசியலும்' என்ற கருத்தரங்கம் சூடான விவாதங்களுடன் நடைபெற்றது. நோக்கவுரையாற்றிய மஜக மாநில செயலாளர் N. #தைமிய்யா அவர்கள்."பாஜக வின் மாட்டுக்கறி அரசியலின் பின்னணிகளையும், நாட்டை காவிமயமாக்க அவர்கள் எடுத்து வரும் அரசியலையும், விலாசித் தள்ளினார். மஜக பொருளாளர் #ஹாருன்_ரஷிது பேசும் போது ' முன்பு பசுவதைக் குறித்து பேசியதால், டெல்லியில் காமராஜர் அவர்களை உயிரோடு கொளுத்த முயன்ற இந்துத்துவ அரசியலை' எடுத்துக்கூறி அவர்களது சதிகளை தோலுரித்தார். அடுத்துப்பேசிய மந்தைவெளி இமாம் #இல்யாஸ்_ரியாஜி அவர்கள் வேதகாலம் தொடங்கி இப்போது வரை தொடரும் மாட்டுக்கறி அரசியலை விலாவாரியாக ஆணித்தரமாக எடுத்துரைத்தார். மேல் 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். #திருமுருகன் அவர்கள், " உணவு அரசியலின் பின்னால் இருக்கும் சர்வதேச அரசியலையும், இந்துத்துவத்தின் பிரித்தாலும் கொள்கைகளையும்" புள்ளிவிபரங்களோடு அம்பலபடுத்தினார். பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் #ரஜினிகாந்த் பேசும் போது' ஒபாமா முதல் எல்லோரும் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள். மாட்டுக்கறியை கெளதம புத்தரும் சாப்பிட்டிருக்கிறார். வேதகாலம் தொடங்கி பிராமணர்கள் சாப்பிட்டுள்ளனர். என்று பேசி ஆவேசமாக பாஜக வின் வகுப்புவாத அரசியலை சாடினார். நிறைவுரையாற்றிய மஜக பொதுச்செயலாளர் M. #தமிமுன்_அன்சாரி அவர்கள்
அன்பு சகோதரி இரோம் சர்மிளாவுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்..
தொடக்கத்தில் இந்த நூற்றாண்டின் இரும்பு பெண்மணியாக தன்னை உலகுக்கு நிரூபித்துக்காட்டிய வீராங்கனைதான் இரோம் சர்மிளா. இந்தியாவின் கிழக்கு வாசல் எனப்படும். அழகிய பூமியாம் மணிப்பூரில் 1972 ல் பிறந்தவர். இன்று மணிப்பூரின் மாணிக்கமாக அம்மக்களால் பெருமையுடன் பேசப்படுகிறார். மண்ணுரிமை உணர்வுகளும், முற்போக்கு சிந்தனைகளும் நிரம்பி தழும்பும் வட கிழக்கு மாநிலங்களில் காஷ்மீரைப் போல இந்திய அரசுப் படைகளின் வரம்பு மீறிய அராஜகங்களும், கற்பழிப்புகளும் நடைபெறுகின்றன. தங்கள் மண்ணை இந்தியா ஆக்கிரமிப்பதாகவும், தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்றும் 50 ஆண்டுகளுக்கு மேலாக வட கிழக்கு பகுதிகளை 7 மாநிலங்களிலும் விடுதலை போராட்டங்கள் வெடித்தன. அஸ்ஸாம், திரிபுரா, மேகலயா,மிசோரம், அருணாச்சல், ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் தனித்து இந்திய ஒன்றியத்தோடு அம்மக்கள் பயணப் படுகிறார்கள். எனினும் நாகலாந்திலும், மணிப்பூரிலும் விடுதலைப் போராட்டங்கள் மக்கள் உணர்வுகளோடு கலந்து தொடர்கின்றன. தேசபக்தி என்ற பெயரிலும், பொது ஒற்றுமை என்ற பெயரிலும் தங்கள் உண்மையான வரலாறும், நீதிகளும் கொல்லப்படுகின்றது என போராட்டக் குழுக்கள் கூறுகின்றன. தேசபக்திக்கு முன்னால் உண்மைகளை பேசக்கூடாது என்பது தான் அரசு நீதியாக உலகம் முழுக்க பார்க்கப்படுகிறது. பலுச்சி மக்களின் உணர்வுகளை பாகிஸ்தானும், குர்து மக்களின் உணர்வுகளை துருக்கியும், ஈழத் தமிழர்களின்