ஆக.13.,குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்திய *சுதந்திர இந்தியா கருத்தரங்கம்* 12/08 2016 (வெள்ளி) அன்று முர்காப் அலி டவரில் *வள்ளல் ஹபீப் முஹம்மது அரங்கத்தில்* சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை *மண்டல செயலாளர் முத்துகாபட்டி ஹாஜாமைதீன்* அவர்கள் தலைமை ஏற்க்க *மண்டல பொருளாலர் சகோ.நீடூர் நபீஸ்* அவர்கள் தொகுத்து வழங்கினார், ஆரம்பமாக *புத்தாநத்தம் கான் இக்பால் ஃபாஜில் மன்பயி* அவர்கள் கிராஅத் ஓதி துவக்கிவைக்க *மண்டல து. செயளாலர் சகோ. அதிரை பைசல் அஹமது* அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார் முன்னிலையாளர்களாக *சகோ. Dr. S.M. ஹைதர் அலி அவர்கள் (TVS HYDER GROUP),* சகோ. *M.சாதிக்* அவர்கள் (லிட்டில் இந்தியா புரோமோட்டர்ஸ்), *சகோ. A.J. மத்தினுல்லாஹ்* அவர்கள் (ARIYAFAL-KHALEEJ GROUPS), *சகோ. M.Y.முகம்மது கவுஸ்* அவர்கள் (வெல்டன் ரியல் புரோமோட்டர்ஸ்), *சகோ. M.சாஹின் ஷா* அவர்கள் (NQG சமூக ஆர்வலர்), *சகோ. S. சாதிக்* அவர்கள் (அல் அவ்தா தச்சுப்பட்டறை), *சகோ. H.முஷாவுதீன் (மண்டல ஆலோசகர் மஜக)* ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மனிதநேய கலாச்சார பேரவையின் கழக பேச்சாளர்கள் உரையாற்றினர் இதை தொடர்ந்து குவைத்தில் இயங்ககூடிய
Author: admin
வாலிபால் போட்டியை மஜக பொதுச்செயலாளர் தொடங்கி வைத்தார்…
ஆக.13.,நாகப்பட்டினம் மாவட்டம் வானதிராஜபுரத்தில் இன்று (13.8.16) வாலிபால் போட்டியை மஜ௧ பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார். முன்னதாக மயிலாடுதுறை அருகில் சீனிவாசபுரம், வானதிராஜபுரம் ஆகிய ஊர்களில் ஜமாத் சந்திப்பும் நடைபெற்றது். பிறகு நீடுர் சென்று சமீபத்தில் மரணமடைந்த பேங்காக் தொழிலதிபர் டாக்டர் அய்யூப் இல்லத்திற்க்கு சென்று அவர்களுடைய குடும்பத்திற்க்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் மாலிக், பொருளாளர் ஷாஜகான், துணை செயலாளர்கள் ஷாகுல் ஹமிது, அபுசாலிஹ், நிர்வாகிகள் சலிம், நிஜாம், ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் : மஜக ஊடக பிரிவு நாகை வடக்கு
சுதந்திரதினத்தை கொண்டாடுவோம்….
ஆக.13.,நமது நாட்டின் 70 வது சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15 2016 அன்று கொண்டாடப்படும் நிலையில், அத்தினத்தை தமிழ்நாடு மற்றும் புதுத்சேரி மாநிலங்களில் #மஜக சார்பில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் கொடுத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி விமர்சையாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி
நாகை விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் MLA!
ஆக்.13., நாகையில் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து sos என்ற தொண்டு நிறுவனம் அக்குழந்தைகளை சிறப்பாக வளர்த்து வருகிறது. நாடெங்கிலும் கிளைகளை கொண்ட அந்நிறுவனத்தின் சார்பில் இன்று நாகப்பட்டினம் EGS பிள்ளை பொறியியல் கல்லுரி வளாகத்தில் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, தெலுங்கான உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து இந்தாண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகள் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று தொடங்கி வைத்து 'sos childrens village of india' நிறுவனத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என கூறினார். இந்நிகழ்ச்சியில் மஜக நிர்வாகிகள் சதகத்துல்லா, முபாரக், ஹமீத் ஜெகபர், சம்பத், கண்ணுவாப்பா, அஜீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல்; மஜக ஊடகப்பிரிவு நாகை தெற்கு
புதிய தலைமுறை நிகழ்ச்சியில்…
புதிய தலைமுறை தொலைக்காட்சி 6 ஆம் ஆண்டு விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு தமிழன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அரசியல், கலை, இலக்கியம், சமூக சேவை, ஊடகம் என பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். (மஜக பொதுச்செயலாளர். M. தமிமுன் அன்சாரி MLA யுடன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை.சத்யா, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA,தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்) தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)