ஆக.16., பாண்டிச்சேரியில் உருளையான் பேட்டை அருகில் உள்ள பள்ளிவாசலை தாக்கியும் அங்கு இமாம் நூருல் அமீன் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபடவேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வழியுறுத்தினோம். அதை கவனமாக கேட்டு நடவடிக்கை கண்டிப்பாக எடுப்பதாகவும் ஊறுதியளித்தார் மஜகமாநில துணை செயலாளர் புதுச்சேரி அப்துல்சமது மற்றும் புதுவை மாநில நிர்வாகிகள் பாண்டிச்சேரி முதல்வர் திரு நாராயனசாமி அவர்களை சந்தித்தார்கள். தாக்குதலில இடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் புதுவையின் அமைதிக்கும் இறையான்மைக்கும் பங்கம் விளைவிப்போர் மீது கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாநில துணை செயலாளரிடம் உறுதியளித்தார். உடன் மஜக பாண்டிச்சேரி நிர்வாகிகள் இருந்தனர். தகவல் : மஜக ஊடகபிரிவு புதுவை
Author: admin
சுதந்திர தினத்தன்று கவர்னர் ரோசையா கொடுத்த தேநீர் விருந்தில் மஜக நிர்வாகிகள்…
இந்தியாவின் 70 வது சுதந்திர தின நிகழ்ச்சியை முன்னிட்டு கவர்னர் ரோசய்யா அளித்த தேனீர் விருந்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துக் கொண்டனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்களும் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்களும் கலந்துக் கொண்டனர். தகவல் : மஜக ஊடகபிரிவு
நாகை தொகுதியில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சுதந்திரதின நிகழ்ச்சியில் பங்கேற்பு…
ஆக.15., இன்று நாகப்பட்டினம் தொகுதியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிகளில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்ட மன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்றார். காலை 8 மணிக்கு நாகை நகர மஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதில் பெண்கள், குழந்தைகள் என திரளானோர் பங்கேற்றனர். அங்கு அனைவருக்கும் இனிப்பும், தேனீரும் வழங்கப்பட்டது. பிறகு 8.30 நாகூர் மஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அங்கு திரண்டிருந்த மக்களுக்கு நாகூரில் புகழ் பெற்ற "நானகுத்தான்" பணியாரம் வழங்கப்பட்டது. தொடந்து 9 மணிக்கு நாகை MLA அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பிறகு சுதந்திர தின உறையாற்றினார். இந்நிகழ்வில் முன்னால் அமைச்சர் ஜீவானந்தம், நகர் மன்ற தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், மஜக மாவட்டச்செயலாளர் ரியாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் ஹமீத் ஜஹ்பர், மற்றும் நாகை, நாகூர் மஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். அங்கு அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. பிறகு 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு கலெக்டர், S.P,
சுதந்திர தினத்தை முன்னிட்டு நெய்வேலி நகரம் மாணவர் இந்தியா சார்பாக மனநலம் பாதிப்பு அடைந்த குழந்தைகள் பள்ளி, முதியோர் இல்லத்திர்க்கும் உணவு பொருள்கள் வழங்கும் நிகழ்வு…
ஆக.15., கடலூர்மாவட்டம் வடக்கு நெய்வேலி நகரம் 70ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர் இந்திய மற்றும் இ.அணி சார்பாக இன்று மதியம் மனநலம் பாதிப்பு அடைந்த குழந்தைகள் பள்ளிக்கு மற்றும் முதியோர் இல்லத்திர்க்கும் உணவு பொருள்கள் வழங்ககும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் N.இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கினைபாளர் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A.ரியாஸ் ரகுமான்.மாநில செயற்குழு உறுப்பினர்கள் P.ஷாஜகான், M.R.அன்வர்தின் நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர். நிகழ்ச்சியின் முன்னிலையாக. நகர செயலாளர் O.A.K.நூர் முஹம்மது ஒன்றிய செயலாளர் ராஜா மூஹம்மது நகர து.செயலாளர் P.S.ரஹ்மான் அலி,ஆதம் செட் மற்றும் இ.அணி நிர்வாகிகள் ஆசார்,சதிஷ்,சதாம் மாணவர் இந்தியா காதர் மொய்தின் மற்றும் நெய்வேலி அரிமா பவர் சிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக ஊடகபிரிவு
மஜக கோவை G.Mநகர் கிளையின் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா…
ஆக.15., மனிதநேய ஜனநாயககட்சி கோவை G.Mநகர் கிளையின் சார்பாக சுதந்திர தினவிழா கொடியேற்று விழாவும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வும் அதைத் தொடர்ந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் Gm நகர் அக்பர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது கலந்துகொண்டு மருத்துவமுகாமை துவக்கி வைத்தார் . இந்நிகழ்வில் மாநில செயலாளர் சுல்தான்அமீர், துணை செயலாளர் அப்துல் பஷீர், கொள்கைபரப்பு செயலாளர் மன்னை செல்லச்சாமி , கொள்கைபரப்பு செயலாளர் அணி செயலாளர் கோவை நாசர், மாநில பேச்சாளர் திருப்பூர் ஹைதர்அலி, மாவட்ட செயலாளர் அப்பாஸ், பொருளாளர் பதுருதீன், துணைச் செயலாளர் Tms.அப்பாஸ் மற்றும் பல்வேறு அணி மற்றும் கிளை நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அனுபவ் ரவி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இந்தமுகாமில் 152 பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள். இதில் 4பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய மஜக மூலம் பரிந்துரைக்கப்பட்டது எல்லாப்புகழும் இறைவனுக்கே!!! தகவல் : மஜக ஊடகபிரிவு தகவல் : மஜக ஊடகபிரிவு