நாகை தொகுதியில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சுதந்திரதின நிகழ்ச்சியில் பங்கேற்பு…

image

image

ஆக.15., இன்று நாகப்பட்டினம் தொகுதியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிகளில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்ட மன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்றார்.

காலை 8 மணிக்கு நாகை நகர மஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதில் பெண்கள், குழந்தைகள் என திரளானோர் பங்கேற்றனர். அங்கு அனைவருக்கும் இனிப்பும், தேனீரும் வழங்கப்பட்டது.

பிறகு 8.30 நாகூர் மஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அங்கு திரண்டிருந்த மக்களுக்கு நாகூரில் புகழ் பெற்ற “நானகுத்தான்” பணியாரம் வழங்கப்பட்டது.

தொடந்து 9 மணிக்கு நாகை MLA அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பிறகு சுதந்திர தின உறையாற்றினார். இந்நிகழ்வில் முன்னால் அமைச்சர் ஜீவானந்தம், நகர் மன்ற தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், மஜக மாவட்டச்செயலாளர் ரியாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் ஹமீத் ஜஹ்பர், மற்றும் நாகை, நாகூர் மஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். அங்கு அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.

பிறகு 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு கலெக்டர், S.P, மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

பிறகு திருமருகளில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்று “விடுதலை போர்” குறித்து உறையாற்றினார். இந்நிகழ்ச்சியை மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். பிறகு மாணவ – மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பிறகு நெல்லுக்கடை கோவிலில் நடைபெற்ற சுதந்திர தின சமபந்தி விருந்தை தொடங்கி வைத்து ,அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை கூறினார்.                    

தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.15_08_16