அக்.07., நேற்று கோவையில் மரணமடைந்த சகோ.ஒஜீர் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி தேவைப்படுவதாக இரங்கல் கூட்டத்தில் கோவை கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஒரு லட்ச ரூபாயும், கோவை ஐக்கிய ஜமாத் சார்பில் ஒரு லட்ச ரூபாயும் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என மஜக பொதுச்செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அறிவித்தார். அங்கே பொதுமக்களிடம் சில்லரை வசூலாக 87 ஆயிரத்து 400 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. பிற அமைப்புகளும், கட்சிகளும் தங்கள் தொகையை பிறகு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தகவல்: மஜக ஊடக பிரிவு (கோவை).
Author: admin
உயிரை_இழக்காமல்_வாழ்ந்து_போராடுவோம்!
(மஜக பொதுச்செயலாளர் வெளியிடும் பத்திரிகை அறிக்கை) காவிரி உரிமையை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியில் அருமைத் தோழர் விக்னேஷ் தன்னுயிரை தீயிலிட்டு தமிழகத்தை பதற வைத்திருக்கிறார். தஞ்சை தரணியை பூர்வீகமாக கொண்ட அவர் சமூக இணைய தளத்தில் தீவிரமாக இயங்கியவர். தமிழ் தேசியம், திராவிட இயக்க வரலாறு, காவி மதவெறி எதிர்ப்பு ஆகியவற்றில் ஆழமான சிந்தனைக் கொண்டவர். காவிரி உரிமை காக்க வாழ்ந்து போராட வேண்டியவர் தன்னுயிரை மாய்க்க புறப்பட்டது பேரதிர்வை தருகிறது. அவர் எழுதியுள்ள கடித ஆவனம் தமிழினத்தின் கொள்ளை அரசியலை முன் வைக்கும் விதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் துடித்த போது அவர் எப்படியாவது பிழைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினேன். அவருக்கருகில் இருந்த அண்ணன் சீமானிடமும், தோழர் P.R.பாண்டியனிடமும் அலைபேசியில் தொடர்புகொண்டு என் வேதனையை; துயரத்தை பகிர்ந்து கொண்டேன். தோழி. செங்கொடி, தோழர். முத்துக்குமார் வழியில் தோழர் விக்னேஷ் எடுத்த முடிவை ஏற்கவே முடியாது. இனம் மானம் காக்க பெரியார் வழியில் வாழ்ந்து போராட வேண்டும். 26 வயதே நிரம்பிய அந்த கொள்கை பூங்கொத்து தீயில் கருகி உயிர் தியாகம் செய்திட்ட துயர செய்தி வந்த
திருப்பத்தூரில் மஜக சார்பில் 3வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு…
செப்.16. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மஜக சார்பில் அர்ப்பணிக்கப்பட்டது.. பிரபல மனிதவள ஆலோசகரும், யாவரும் கேளீர் அறக்கட்டளையின் ஆலோசகருமான பொன்.முகைதீன் பிச்சை அவர்களின் முன் முயற்சியில் இந்த ஆம்புலன்ஸ் மஜக வுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி_MLA , தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. நாசர், துணைப்பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் அறக்கட்டளையின் செயலாளர் N.ராமேஸ்வரன், பெரிய பள்ளி ஜமாத் செயலாளர் அப்துல் காதர்,டவுன் ஹாஜி முகம்மது பாருக் ஆலிம், மஜக மாவட்ட செயலாளர் S.அப்துல் மஜிது , நகர செயலாளர் செய்யது முஹமது மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு (சிவகங்கை மாவட்டம்)
பக்ரீத் பண்டிகைக்காக காலாண்டு தேர்வுகள் மாற்றம் மஜக கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு நன்றி
(மனிதநேய ஜனநாயக கட்சி, பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) பக்ரீத் பண்டிகை செப்டம்பர் 13 அன்று வருவதால் அதற்கு முதல் நாளும்,அடுத்த நாளும் தேர்வுகள் நடத்துவதை ஒத்திவைக்குமாறு சட்டசபையில் நான் கோரிக்கை வைத்தேன். வெளியூரில் பயிலும் மாணவர்கள் பக்ரீத் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்லவும், முறையான அவகாசத்துடன் தேர்வு எழுதவும் அவர்களின் பயண நேரத்தை கவனத்தில் கொண்டு இக்கோரிக்கை வைப்பதாக கூறினேன். இது குறித்து சட்டசபை நடைபெற்ற கடைசி நாளில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பாண்டியராஜன் அவர்களிடமும் நேரில் மனு கொடுத்து விவரித்தேன். இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் என்னை தொடர்பு கொண்ட அமைச்சர் அவர்கள்,முதல்வர் அம்மா அவர்களின் முறையான ஒப்புதல் கிடைத்திருப்பதாகவும் நாளை முறையான அறிவிப்பு வரும்மென்று கூறி வாழ்த்து சொன்னார். அதன்படியே இன்று தமிழக அரசு பக்ரீத் முதல் நாள் செப்டம்பர் 12 அன்றும்,பக்ரீத்துக்கு அடுத்த நாள் செப்டம்பர் 14 அன்றும் காலாண்டு தேர்வுகளை நடத்தாமல் வேறு தேதிக்கு ஒத்தி வைத்து அறிவித்து இருக்கிறது. சிறுபான்மை மக்கள் மனம் குளிரும் வகையில் இந்த விசயத்தில் செயல்பட்ட மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கும்,இக்கோரிக்கையை உரிய முறையில்
சட்டசபையில் சிறுபான்மை மானியக் கோரிக்கை விவாதத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி உரையின் கடைசி பகுதி
#உலமா_நல_வாரியத்திற்கு_உலமாவை_தலைவராக்க_வேண்டும் #அலிகர்_பல்கலைக்கழக_கிளையை_தமிழகத்தில்_தொடங்க_வேண்டும். #பள்ளிவாசல்_தேவாலயங்களுக்கான_அனுமதியை_இலகுவாக்க_வேண்டும். #தியாகி_அமீர்_ஹம்ஸா_குடும்பத்திற்கு_உதவிடுக! #பக்ரீத்_பண்டிகைக்காக_தேர்வுகளை_முன்பும்_பின்பும்_மாற்ற_வேண்டும். #உலமாக்கள்_நலவாரியம் உலமாக்களுக்கு அறிவிக்கப்பட்ட நலவாரியம் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் அதற்கு வாரியத் தலைவரை நியமிக்க வேண்டும் என்றும்,அவர் ஒரு உலமாவாக இருப்பது சிறப்பாக இருக்கும் என்பதையும் மாண்புமிகு அம்மா அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். #அலிகார்_பல்கலைக்கழகம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கிளை நிறுவனங்கள் மத்திய_மாநில அரசுகளின் உதவியோடு பீஹார்,மேற்குவங்கம்,கேரளா மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அதேப்போல தமிழ்நாட்டிலும் தொடங்க மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை அதற்கு அளித்தால் அப்பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் கிளையை தொடங்க முடியும்.எனவே மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு ஆவணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். #பள்ளிவாசல்_தேவாலயங்களுக்கான_அனுமதியை_இலகுவாக்க_வேண்டும். பட்டா இடங்களில் பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் கட்ட அனுமதி பெறுவதில் சில இடங்களில் சிக்கல்கள் இருக்கின்றன அதை எளிமை படுத்தி தரவேண்டும். #தியாகிகளுக்கு_மரியாதை சுதந்திரப் போராட்ட தியாகிகளை மதிக்கக்கூடிய அரசாக மாண்புமிகு அம்மா அவர்களின் இந்த அரசு இருக்கிறது. அவர்களுடைய தியாகத்தினால்தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். எனவே ,சுதந்திரப் போராட்ட தியாகிகளுடைய குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்புகளிலே முன்னுரிமை தர வேண்டும். அரசாங்கத்தினுடைய திட்டங்களிலே,நலன்களிலே அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று கேட்டிருக்கின்றார்கள்.மிக முக்கியமாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களோடு தோளோடு