சட்டசபையில் சிறுபான்மை மானியக் கோரிக்கை விவாதத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி உரையின் கடைசி பகுதி

#உலமா_நல_வாரியத்திற்கு_உலமாவை_தலைவராக்க_வேண்டும்

#அலிகர்_பல்கலைக்கழக_கிளையை_தமிழகத்தில்_தொடங்க_வேண்டும்.

#பள்ளிவாசல்_தேவாலயங்களுக்கான_அனுமதியை_இலகுவாக்க_வேண்டும்.

#தியாகி_அமீர்_ஹம்ஸா_குடும்பத்திற்கு_உதவிடுக!

#பக்ரீத்_பண்டிகைக்காக_தேர்வுகளை_முன்பும்_பின்பும்_மாற்ற_வேண்டும்.

#உலமாக்கள்_நலவாரியம்

உலமாக்களுக்கு அறிவிக்கப்பட்ட நலவாரியம் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் அதற்கு வாரியத் தலைவரை நியமிக்க வேண்டும் என்றும்,அவர் ஒரு உலமாவாக இருப்பது சிறப்பாக இருக்கும் என்பதையும் மாண்புமிகு அம்மா அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

#அலிகார்_பல்கலைக்கழகம்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கிளை நிறுவனங்கள் மத்திய_மாநில அரசுகளின் உதவியோடு பீஹார்,மேற்குவங்கம்,கேரளா மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

அதேப்போல தமிழ்நாட்டிலும் தொடங்க மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை அதற்கு அளித்தால் அப்பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் கிளையை தொடங்க முடியும்.எனவே மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு ஆவணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

#பள்ளிவாசல்_தேவாலயங்களுக்கான_அனுமதியை_இலகுவாக்க_வேண்டும்.

பட்டா இடங்களில் பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் கட்ட அனுமதி பெறுவதில் சில இடங்களில் சிக்கல்கள் இருக்கின்றன அதை எளிமை படுத்தி தரவேண்டும்.

#தியாகிகளுக்கு_மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகிகளை மதிக்கக்கூடிய அரசாக மாண்புமிகு அம்மா அவர்களின் இந்த அரசு இருக்கிறது. அவர்களுடைய தியாகத்தினால்தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.

எனவே ,சுதந்திரப் போராட்ட தியாகிகளுடைய குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்புகளிலே முன்னுரிமை தர வேண்டும். அரசாங்கத்தினுடைய திட்டங்களிலே,நலன்களிலே அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று கேட்டிருக்கின்றார்கள்.மிக முக்கியமாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களோடு தோளோடு தோள் நின்று போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் அமீர் அம்ஸா அவர்களுடைய குடும்பம் மிகுந்த வறுமையில் இருப்பதாக என்னிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்,அதையும் உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

#பண்டிகை_விடுமுறையில்_நெகிழ்வு_வேண்டும்

பக்ரீத் பண்டிகை பிறை பார்த்தலில் அடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் 13 அன்று கொண்டாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தருணத்தில் கல்வித்துறை சார்பில் காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.பக்ரீத் பண்டிகைக்காக வெளியூர்களில் படிக்கும் மாணவர்கள் தங்கள் ஊர்களுக்கு வந்து செல்லவும், பண்டிகையை கொண்டாடவும் வேண்டி உள்ளது. அவர்களது பயணம்,நேரம்,மகிழ்ச்சி, தேர்வுக்கான தயாரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு செப்டம்பர் 13 அன்று பக்ரீத் விடுமுறையையொட்டி அதற்கு முதல் நாள் செப்டம்பர் 12 அன்றும், அடுத்த நாள் செப்டம்பர் 14 அன்றும் தேர்வுகள் நடைபெறாமல் கல்வி அமைச்சகம் அந்த அறிவிப்பு அட்டவணையை முன் கூட்டியே திருத்தி அறிவிக்குமாறு மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசை கேட்டுக் கொள்கிறேன்.

தகவல்;

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்