பக்ரீத் பண்டிகைக்காக காலாண்டு தேர்வுகள் மாற்றம் மஜக கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு நன்றி

image

(மனிதநேய ஜனநாயக கட்சி, பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

பக்ரீத் பண்டிகை செப்டம்பர் 13 அன்று வருவதால் அதற்கு முதல் நாளும்,அடுத்த நாளும் தேர்வுகள் நடத்துவதை ஒத்திவைக்குமாறு சட்டசபையில் நான் கோரிக்கை வைத்தேன்.

வெளியூரில் பயிலும் மாணவர்கள் பக்ரீத் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்லவும், முறையான அவகாசத்துடன் தேர்வு எழுதவும் அவர்களின் பயண நேரத்தை கவனத்தில் கொண்டு இக்கோரிக்கை வைப்பதாக கூறினேன்.

இது குறித்து சட்டசபை நடைபெற்ற கடைசி நாளில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பாண்டியராஜன் அவர்களிடமும் நேரில் மனு கொடுத்து விவரித்தேன்.

இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் என்னை தொடர்பு கொண்ட அமைச்சர் அவர்கள்,முதல்வர் அம்மா அவர்களின் முறையான ஒப்புதல் கிடைத்திருப்பதாகவும் நாளை முறையான அறிவிப்பு வரும்மென்று கூறி வாழ்த்து சொன்னார்.

அதன்படியே இன்று தமிழக அரசு பக்ரீத் முதல் நாள் செப்டம்பர் 12 அன்றும்,பக்ரீத்துக்கு அடுத்த நாள் செப்டம்பர் 14 அன்றும் காலாண்டு தேர்வுகளை நடத்தாமல் வேறு தேதிக்கு ஒத்தி வைத்து அறிவித்து இருக்கிறது.

சிறுபான்மை மக்கள் மனம் குளிரும் வகையில் இந்த விசயத்தில் செயல்பட்ட மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கும்,இக்கோரிக்கையை உரிய முறையில் கையாண்ட மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அண்ணன் பாண்டியராஜன் அவர்களுக்கும்..

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
09_09_16