நேற்று தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி அவர்களுக்கு வாக்கு கேட்டு மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் காலை முதல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜூதீன், ராசுதீன், மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாளர் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் ஷேக், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா, மனிதநேய வணிகர் சங்க மாநில செயலாளர் யூசுப் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலையில் தஞ்சை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று பொதுச்செயலாளர் அவர்கள் வாக்கு சேகரித்தார். மாலை 6:30 க்கு வல்லம் நகரில் பெருந்திரளான கூட்டத்திற்கு மத்தியில் வாக்கு சேகரித்தார்கள். பிறகு 8:30 க்கு கீழவாசலில் பிரச்சாரம் செய்தார். முன்னதாக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் MP, வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு, கைத்தறி துறை அமைச்சர் O.S மணியன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன், பேராவுரணி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் சந்தித்து தொகுதி நிலவரம் குறித்து கலந்துரையாடினர். மேலும் இத்தொகுதியில் மஜக வின் களப்பணிகள் குறித்தும் பாராட்டு தெரிவித்தனர். தகவல்; மஜக ஊடக
Author: admin
அமெரிக்க தேர்தல் முடிவு எதிர்பாராதது! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கருத்து…
உலகில் ஜனநாயகம் செழித்தோங்கும் தேசங்களில் அமெரிக்கா முதலிடம் பெறுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்பு அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இரு துருவங்களாக செயல்பட்டு உலகை ஆளுமை செலுத்தின. 1991-ல் சோவியத் யூனியன் சிதைந்தப்பிறகு, அமெரிக்கா ஏக வல்லரசாக மாறியது. அதன் பிறகு அமெரிக்காவின் தேர்தல் உலகம் முழுக்க ஆவலோடு எதிர் நோக்கப்படுகிறது. தற்போது 2016-க்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முற்றிலும் புதிய சூழலில் நடைபெற்றிருக்கிறது. தனிநபர் விமர்சனங்கள், இனவாதம், பெண்கள் மீதான விமர்சனம் என நிறம் மாறியது. கடந்த இரண்டு தேர்தல்களில் ஜனநாயக கட்சி சார்பில் கருப்பு இனத்தை சேர்ந்த பராக் ஒபாமா அதிபராக வெற்றி பெற்று அமெரிக்கா மக்களின் பன்மை கலாச்சாரத்தை பிரதிபலித்தார். ஆனால் இந்த தேர்தலில் ஒரு பெண் என்ற அடிப்படையிலும், பல்வேறு இன மக்களின் உணர்வுகளை மதிப்பவர் என்ற அடிப்படையிலும் ஹில்லாரி வெற்றி பெறுவார் என பரவலாக பேசப்பட்டது. நம்மை போன்றவர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது. காரணம் ட்ராம்ப் பெண்களுக்கு எதிரானவர்; பல்இன மக்களின் கூட்டுக் கலாச்சாரத்திற்கு எதிரானவர் ; என பல்வேறு பிம்பங்களை அவரே வெளிப்படுத்தினார். நேற்று காலை வெளியான தேர்தல் முடிவுகள் ஹில்லாரியை விட கூடுதல் இடங்களை பெற்று ட்ராம்ப் வெற்றிப்
தஞ்சை தொகுதியில் மஜக பொதுச்செயலாளர் அனல் பறக்கும் பிரச்சாரம்!
நேற்று தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி அவர்களுக்கு வாக்கு கேட்டு மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் காலை முதல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜூதீன், ராசுதீன், மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாளர் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் ஷேக், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா, மனிதநேய வணிகர் சங்க மாநில செயலாளர் யூசுப் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலையில் தஞ்சை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று பொதுச்செயலாளர் அவர்கள் வாக்கு சேகரித்தார். மாலை 6:30 க்கு வல்லம் நகரில் பெருந்திரளான கூட்டத்திற்கு மத்தியில் வாக்கு சேகரித்தார்கள். பிறகு 8:30 க்கு கீழவாசலில் பிரச்சாரம் செய்தார். முன்னதாக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் MP, வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு, கைத்தறி துறை அமைச்சர் O.S மணியன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன், பேராவுரணி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் சந்தித்து தொகுதி நிலவரம் குறித்து கலந்துரையாடினர். மேலும் இத்தொகுதியில் மஜக வின் களப்பணிகள் குறித்தும் பாராட்டு தெரிவித்தனர். தகவல்; மஜக ஊடக
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரம் மஜக பொதுச்செயலாளர் வருகை…
எதிர் வரும் 16.11.2016 அன்று மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் A.K. போஸ் அவர்களை ஆதரித்து ம.ஜ.க பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அது சம்பந்தமாக அ.இ.அ.தி.மு.க தொகுதி தலைமை காரியாலயத்தில், அ.இ.அ.தி.மு.க பொறுப்பாளர்களிடம், ம.ஜ.க துணைப் பொதுச் செயலாளர் K.M. முகம்மது மைதீன் உலவி, கொள்கை பரப்புச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் சேக் அகமது அப்துல்லா, பொருளாளர் புதூர் சாலி, தெற்கு மாவட்ட பொருளாளர் மைதீன் பாபு, முன்னாள் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் யாசிர் ஆகியோர் சந்தித்து திட்டமிடல் வகுக்கப்பட்டு, பொதுச் செயலாளர் அவர்களின் பிரச்சார நிகழ்வை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தகவல் திருப்பரங்குன்றம் தேர்தல் பணிக்குழு மனிதநேய ஜனநாயக கட்சி
அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு சார்பாக பொதுசிவில் சட்ட விளக்க பொதுக்கூட்டம் மஜக பொருளாலர் பங்கேற்பு!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 8.11.16 அன்று மாலை ஆவடி பெரு நகராட்சி அனைத்து பள்ளிவாசல் சார்பாக மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது கூட்டம் நடை பெற்றது. இப்பொது கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரஷீத், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் Ex.mp, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் K.A.M.அபுபக்கர் M.L.A, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் S.M.பாக்கர், S.D.P.I.மாநில தலைவர் தெஹ்லான் பாஃகவி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் P.அப்துல் சமத், சமூக ஆர்வலர் S.மசூதா ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பொது கூட்டத்திற்கு அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு செயலாளர் A.ஹம்சா தலைமை வகித்தார். அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் ஹாஜி.S.சர்புதீன் முன்னிலை வகித்தார் . தகவல்: மஜக ஊடக பிரிவு திருவள்ளூர் மாவட்டம்.