நாடாளுமன்ற தேர்தல் 2024… இராமநாதபுரம் தொகுதி வேட்பாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு….

ஏப்ரல்.2.,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் I.N.D.I.A கூட்டணியின் வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி அவர்களையும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் திரு.காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்களையும் மஜக இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் பைசல் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய “புயலோடு போராடும் பூக்கள்” எனும் கவிதை நூலை பரிசளித்தனர்

இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சையத் இபுராஹிம், மாவட்ட பொருளாளர் நாகூர் மீரான், மாவட்ட துணை செயலாளர்கள் அபுல் ஹசன், ஆசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

இச்சந்திப்பின் போது இரண்டாம் கட்டமாக இராமநாதபுரத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#இராமநாதபுரம்_மாவட்டம்
01.04.2024.