குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை - மனிதநேய ஜனநாயக கட்சியில் பல்வேறு கட்சியிலிருந்து வந்த சகோதரர்கள் குவைத் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் இணைந்தனர், தொடர்ந்து புதிய சகோதரர்கள் அறிமுகமும் மஜகவின் செயல்பாடுகள் குறித்தும் உரையாடப்பட்டது. *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு குவைத் மண்டலம் 55278478 - 60338005 - 55260018. E-mail: kuwaitmjk@gmail.com
Author: admin
நாகூரில் நிலக்கரி மாசு பரவல்… மார்க் துறைமுக அதிகாரியிடம் தமிமுன் அன்சாரி MLA புகார்!
நாகூரையொட்டி காரைக்காலில் செயல்படும் மார்க் தனியார் துறைமுகத்தில் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யல்படுகிறது. அதனால் எழும் தூசுகளால் நாகூர், வாஞ்சூர் பகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது காற்று தெற்கு நோக்கி வீசுவதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் புகார் கூறினர். இன்று காலை மார்க் துறைமுக அதிகாரி ரெட்டியை அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு பேசிய தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தனது கண்டனத்தை தெரிவித்து உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
பிடல் காஸ்ட்ரோ மரணம்! செவ்வானம் இருண்டு விட்டதோ…?
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் அறிக்கை) ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி; மக்கள் விடுதலையை கட்டியமைத்து; புரட்சிகர கியூபாவை உருவாக்கிய மாவீரன் பிடல் காஸ்ட்ரோ இன்று இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தப் போது, உடலில் மின் அதிர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. புரட்சியாளன் சேகுவேராவுடன் இணைந்து, கியூபாவின் பாடிஸ்டா சர்வாதிக்கார அரசுக்கு எதிராக அவர் நடத்திய வீரஞ்செறித்த போர்களங்கள் வரலாறு பாராட்டும் செய்திகளாகும். ஏகாதிபத்திய அரசுகளின் வஞ்சக சதிகளை முறியடித்து; உலகம் பாராட்டும் வகையில் அவர் உருவாக்கிய புரட்சிகர கியூபா அரசு; ஒடுக்கப்பட்ட மற்றும் வளரும் நாடுகளுக்கு நம்பிக்கையை ஊட்டியது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் புரட்சி தீயை பரப்பியது. ஏகாதிபத்திய அமெரிக்காவை குலை நடுங்க செய்தது. வல்லாதிக்க அமெரிக்காவின் அருகில் ஒரு குட்டி தீவாய் இருந்து கொண்டு, வாஷிங்டனின் ஈரக்குலையை நடுங்க செய்த பெருமை பிடல் காஸ்ட்ரோவை சாரும். பாலஸ்தீன மக்களுக்காகவும், உலகெங்கிலும் விடுதலைக்காக ஏங்கிய தேசிய இனங்களுக்காகவும் அவர் காட்டிய ஆதரவு மகத்தானது. ஏகாதிபத்திய நெருக்கடிகளை தாண்டி, கியூபா மக்களுக்கு வேலை, உணவு, கல்வி, மருத்துவம், சுகாதாரம், நியாயமான வருவாய் ஆகியன கிடைக்கும் வகையில் அவர் ஆற்றிய அரசியல் - சமூக
திருச்சி கண்டன பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பபு…
ஜமாத்துல் உலமாவின் முன் முயற்சியில் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைந்து பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மத்திய அரசை கண்டித்து #திருச்சியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA எழுச்சியுரையாற்றினார். முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் வந்திருந்தனர். இதில் SDPI, TMMK, JAQH,INTJ, PFI அஹ்லே ஹதீஸ், WPI உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் உரையாற்றினர். உழவர் சந்தை திடல் நிறைந்து எங்கும் பேரெழுச்சியாக இருந்தது. உலமாக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தகவல்; மஜக ஊடகப்_பிரிவு (திருச்சி மாவட்டம்)