தொண்டி.டிச.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு கட்சி பணிகள் மற்றும் ஜமாதார்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்கள். அதன் ஒரு பகுதியாக தொண்டி வருகை தந்த தமிமுன் அன்சாரி அவர்கள் மஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். பிறகு ஜமாத்தார்களுடன் நல்லெண்ண சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஜமாஅத்தினர் தங்கள் தொகுதி MLA கருணாஸ் மூலம் தங்கள் ஊருக்கான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு வேண்டுகோள் விடுத்தனர், விரைவில் கருணாசுடன் வருகை தந்து கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதாக வாக்குறுத்தியளித்தார். இதில் வடக்கு தெரு ஜமாத் நிர்வாகிகள் ரசூல் மைதீன், மஜக தொண்டி நகர செயலாளர் சீனி முகம்மது, பொருளாளர் ரகுமான் தொழிலாளர் அணி ஷேக் மைதீன், துணை செயலாளர் ராவுத்தர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_கிழக்கு
Author: admin
ராமநாதபுரத்தில் மஜக மாவட்ட அலுவலகத்தை பொதுச்செயலாளர் திறந்து வைத்தார்..!
ராமநாதபுரம்.டிச.27., ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் சார்பில் ராமநாதபுரத்தில் மாவட்ட அலுவலகத்தை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதன் பிறகு சின்னக்கடையில் மஜக கொடியை எழுச்சி முழக்கங்களுக்கு மத்தியில் ஏற்றி வைத்தார். முன்னதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மஜக துணைப் பொதுசெயலாளர் மண்டலம் ஜெய்னுலாபுதீன், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் MMH. முபாரக் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இதில் மாவட்ட பொருளாளர் i.அப்துல் நசீர், மாவட்ட துணை செயலாளர்கள் தேவிப்பட்டினம் சுல்தான், RS. மங்களம் அபுதாஹிர், தொண்டி முஹம்மது, கீழக்கரை ஹபீப், வர்த்தக அணி செயலாளர் இபுனு சூது, விவசாய அணி தொண்டி ராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_கிழக்கு 27.12.17
மஜக திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம்…! மாநில செயலாளர் பங்கேற்பு..!!
திருவாரூர்.டிச.27., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் பொதக்குடியில் நேற்று (26/12/2017) காலை 11:30 முதல் 2:00 மணிவரை மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு செய்து எதிர்கால செயல் திட்டங்களை எடுத்துரைத்தார். அதில் முதல்கட்டமாக கிளைகளின் செயல்பாடுகளை வீரியமாக கொண்டுசெல்வதற்கு மாவட்ட பொதுக்குழுவை நடத்துவது. அதற்கு முன்பாக இன்னு சில தினங்களில் மாவட்ட அணி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் உள்ளடக்கிய மாவட்ட செயற்குழுவை கூட்டுவது அவர்களிடமும் கருத்துக்களை கேட்டு மாவட்டத்தின் அணைத்து கிளைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சுற்றுப்பயணம் மேற்கொள்வது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் ஷாகுல், மாவட்ட துணை செயலாளர்கள் கட்டிமேடு அய்யூப் கான், அத்திக்கடை லியாக்கத் அலி, அடியக்கமங்களம் நிஜாம் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவாரூர்_மாவட்டம் 26.12.17
கத்தார் மண்டலம் MKPயின் புதிய இரண்டு கிளை உதயம்..! தமுமுகவின் IQIC இரண்டு கிளைகள் கலைக்கப்பட்டு MKPயில் இணைந்தனர்..!!
தோஹா.டிச.26., மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பில் கடந்த 24/12/2017 அன்று மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ் அவர்கள் தலைமையில் சனயா (Sanaya-39 Almillion) மற்றும் சஹானியா (Sahaniya- Almillion) ஆகிய பகுதிகளில் புதிய இரண்டு கிளைகள் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமுமுகவின் கத்தார் மண்டல கிளை அமைப்பான IQICஇல் இருந்து விலகி இரண்டு கிளைகள் கலைக்கப்பட்டடு மனிதநேய கலாச்சாரப் பேரவையில் இணைந்தனர். இதில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மண்டலா நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர். தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் +97455734012 25.12.2017
டிடிவி தினகரன் வெற்றி…! மஜக வாழ்த்து…!!
(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் வாழ்த்துச் செய்தி..) தமிழ்நாட்டில் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கபட்ட RK நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக , புதிய சின்னத்தில் போட்டியிட்ட , சகோதரர் #TTV_தினகரன் அவர்கள் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. தனக்கான அரசியல் பயணத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆளும் கட்சியையும், எதிர் கட்சியையும் பின்னுக்கு தள்ளி, அவர் இடைத்தேர்தலில் ஈட்டியிருக்கும் அபார வெற்றி தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் அரசியல் சூழ்ச்சிகளை உறுதியாக எதிர்கொண்டு, அதற்கு துணைபோன அதிமுக அரசை துணிச்சலுடன் எதிர்த்தது அவரை மக்கள் செல்வாக்கு மிக்க நபராக உருவாக்கியிருக்கின்றது. வகுப்பு வாத சக்திகளை துணிச்சலாக எதிர்ப்பவர்களை தமிழக மக்கள் தூக்கி நிறுத்துவார்கள் என்பது RK. நகர் இடைத்தேர்தலில் நிரூபிக்கபட்டிருக்கிறது. தமிழக மக்களின் பொது மனநிலையை RK. நகர் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. அந்த வகையில் சகோதரர் TTV. தினகரன் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். திராவிட இயக்கம் வளர்த்து தந்த சமூக நீதி, மதச்சார்பின்மை, தமிழர் நலன் ஆகிய களங்களில் அவர்