ராமநாதபுரத்தில் மஜக மாவட்ட அலுவலகத்தை பொதுச்செயலாளர் திறந்து வைத்தார்..!

image

image

image

image

ராமநாதபுரம்.டிச.27., ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் சார்பில் ராமநாதபுரத்தில் மாவட்ட அலுவலகத்தை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதன் பிறகு சின்னக்கடையில் மஜக கொடியை எழுச்சி முழக்கங்களுக்கு மத்தியில் ஏற்றி வைத்தார்.

முன்னதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் மஜக துணைப் பொதுசெயலாளர் மண்டலம் ஜெய்னுலாபுதீன், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் MMH. முபாரக் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் இதில் மாவட்ட பொருளாளர் i.அப்துல் நசீர், மாவட்ட துணை செயலாளர்கள் தேவிப்பட்டினம் சுல்தான், RS. மங்களம் அபுதாஹிர், தொண்டி முஹம்மது, கீழக்கரை ஹபீப், வர்த்தக அணி செயலாளர் இபுனு சூது, விவசாய அணி தொண்டி ராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_இராமநாதபுரம்_கிழக்கு
27.12.17