ஏப்.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் இன்று காலை அஇஅதிமுக முன்னால் நகர செயலாளரும், 6வது வார்ட் கவுன்சிலருமான சகோதரர்.முருகன் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் அப்பகுதி பொது மக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார். உடன் மஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மாநில,மாவட்ட,ஒன்றிய,கிளைகழக நிர்வாகிகள் இருந்தனர். தகவல் : மஜக ஊடகப் பிரிவு
Author: admin
நாகை பஜாரில் மக்களோடு மக்களாக மஜக வெற்றி வேட்பாளர்…
நாகை தொகுதி அதிமுக கூட்டணியின் மஜக வெற்றி வேட்பாளர் அண்ணன் M.தமிமுன்_அன்சாரி நாகை கடைவீதிகளில் மக்களோடு மக்களாக கலந்து உரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் ... மக்கள் அவரை சுற்றிநின்று கூட்டம் கூட்டமாக கைகுலுக்கி மகிழ்ந்து வாழ்த்து கூறினர் . இப்படியே எப்போதும் சகஜமாக இருங்கள் என்றும் கூறினர் ... - மஜக ஊடகப் பிரிவு
மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் மஜக நிர்வாகிகள் சந்திப்பு.
ஏப்.11., இன்று இளையான்குடி நகரில் மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சகோதரர் S.மாரியப்பன் கென்னடி BA அவர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தொகுதி வேட்பாளரை சிவகங்கை மாவட்ட செயலாளரும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான P.R.செந்தில் நாதன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான அன்பழகன் அவர்களும், ஒன்றிய செயலாளர் அழகு சுப்பு அவர்கள், நகர் செயலாளர் அன்வர் அவர்கள், பேரூராட்சி தலைவர் அய்யூப் அலிக்கான் அவர்களும் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மரியாதை நிமிர்த்தமாக அதிமுகவின் கூட்டனி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர் செயலாளர் உமர் கத்தாப் தலைமையில் மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர் துனைச் செயலாளர்கள் செய்யது மஹபு, சிராஜ் அஹமது மற்றும் ஜமால் முகைதீன், சதாம் உசேன், சலீம், உஸ்மான், முத்து முஹம்மது மற்றும் பலர் கலந்து கொண்டனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
மேட்டுப்பாளையம் மஜக அலுவலகத்திற்க்கு அதிமுக மேட்டுப்பாளைம் சட்டமன்ற வேட்பாளர் O.K.சின்னராஜ் MLA வருகை…
மேட்டுப்பாளையம் மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்திற்க்கு அதிமுக மேட்டுப்பாளைம் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் O.K.சின்னராஜ் MLA அவர்கள் மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்தார்கள். சந்திப்பின் போது மஜக மாவட்ட செயலாளர், R.முஹம்மது அப்பாஸ், பொருளாளர் M.காஜாமைதின், மாவட்ட துனை செயலாளர் EMS.ரபிதின், மாவட்ட துனை செயலாளர் SMR.பாரி, தொழிற்சங்க செயலாளர் VMT.ஜாபர், மாவட்ட மாணவரனி செயலாளர் M.A. அப்துல் ராஜிக், மாவட்ட வணிகர் சங்க செயலார் M.E.B.ஹக்கிம், நகரசெயலாளர் M.ரசிது அஹமது, துனை செயலாளர் A.அஜீஸ், பொருளாளர் ACS.அபு கூட்டணி கட்சியான அதிமுக நகர செயலாளர் வான்மதிசேட், ITS அமானுல்லா M.S.ராஜ்குமார், மைதானம் சந்தானம், வெள்ளியங்கிரி MC.பாலன் மற்றும் அதிமுக மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
சகோதரர் AS.அலாவுதீன் அவர்களுடன் நாகை சட்டமன்ற மஜக வேட்பாளர சந்திப்பு…
ஏப்.11.,தமுமுகவின் முன்னால் துணைப் பொதுச்செயலாளரும், TNTJ-வின் முன்னால் பொதுச்செயலாளருமான சமூக ஆர்வலர் சகோதரர் A.S.அலாவுதீன் அவர்களை மஜக வின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்து ஆதரவு கோரினார். இருவரும் நீண்டகாலமாக சகோதரத்துவ உறவுகளுடன் பயணிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஊடகத்துறையில் வேட்பாளர் தமிமுன் அன்சாரி அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தி , வழிநடத்தியவர் சகோதரர் A.S.அலாவுதீன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைப்புகள் பிரிந்த நிலையிலும் , நெருக்கடியான பல்வேறு காலக் கட்டங்களிலும் இருவரும் தங்களது நட்பை முறிக்காமல் பயணித்து வருகிறார்கள் . -மஜக ஊடகப்பரிவு