மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் மஜக நிர்வாகிகள் சந்திப்பு.

ஏப்.11., இன்று இளையான்குடி நகரில் மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சகோதரர் S.மாரியப்பன் கென்னடி BA அவர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தொகுதி வேட்பாளரை சிவகங்கை மாவட்ட செயலாளரும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான P.R.செந்தில் நாதன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான அன்பழகன் அவர்களும், ஒன்றிய செயலாளர் அழகு சுப்பு அவர்கள், நகர் செயலாளர் அன்வர் அவர்கள், பேரூராட்சி தலைவர் அய்யூப் அலிக்கான் அவர்களும் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மரியாதை நிமிர்த்தமாக அதிமுகவின் கூட்டனி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர் செயலாளர் உமர் கத்தாப் தலைமையில் மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர் துனைச் செயலாளர்கள் செய்யது மஹபு, சிராஜ் அஹமது மற்றும் ஜமால் முகைதீன், சதாம் உசேன், சலீம், உஸ்மான், முத்து முஹம்மது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தகவல் : மஜக ஊடகப்பிரிவு