ஜனவரி.26., இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவையொட்டி, மனிதநேய ஜனநாயக கட்சியின் 17-வது ஆம்புலன்ஸ் சேவை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நாகை மாவட்டம், தோப்புத்துறையில் நடைபெற்றது. முன்னதாக மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தேசிய கொடி ஏற்றினார். பிறகு ஆம்புலன்ஸ் சேவையை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அவர்கள் தொடங்கி வைத்தார். அவர் சாவியை வழங்க, அதை ஜமாத் மன்ற தலைவர் முகம்மது ஷாஃபி, இந்து இளைஞர் நற்பணி மன்ற தலைவர் J. பாலசுப்ரமணியம், ஆரிபா குழுமங்களின் தலைவர் சுல்தானுல் ஆரிபின் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். ஆம்புலன்ஸை அர்ப்பணித்த கருணாஸ் அவர்கள், அவரே வண்டியை சாவி கொடுத்து ஓட்ட, அருகில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களையும் உட்கார வைத்துக் கொண்டு செல்ல கூட்டம் கைத்தட்டி ஆராவாரம் செய்தது. பிறகு துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்கள் பிரேத குளிர்சாதனப்பெட்டியை அர்ப்பணித்தார். 600-க்கும் மேற்பட்டோருக்கு சந்தன மரக்கன்றுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் சேது. கருணாஸ் அவர்களின் உரை கலகலப்பாகவும், சம கால அரசியல் போக்குகளை உரசி செல்லும் விதமாகவும் இருந்தது. இந்நிகழ்வில் தோப்புத்துறை, வேதாரணியம், தேத்தாக்குடி, ஆறுகாட்டுத் துறை, புஷ்பவனம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், திரளான
Author: admin
ஏனங்குடியில்.. மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா…
ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் ஏனங்குடியில் ஆதலையூர் ஜமாத் முத்தவல்லி ரசீது அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்தார். பிறகு தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று மஜக வினர் இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள். இதில் மாணவர் இந்தியா தஞ்சை மண்டல செயலாளர் நிசாத்,நாகை மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன், மாவட்ட துணை செயலாளர் பேபி ஷாப் (எ) பகுருதீன்,MJVS மாவட்ட செயலாளர் முத்து, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் அப்துல் மாலிக், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், ஏனங்குடி கிளை செயலாளர் யாசீன் மற்றும் ஆதலையூர் கிளை உறுப்பினர்கள்,ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம் 26/01/2024.
அத்திக்கடையில்…. மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா….
ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின், திருவாரூர் மாவட்டம், அத்திகடை & பாலாக்குடி கிளை சார்பாக கிளை அலுவலகத்தில் கிளை பொறுப்பாளர் ரிஸ்வான் முகம்மது அவர்கள் தலைமையில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் அத்திகடை முன்னால் ஜமாத் துணை தலைவர் A.அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். கிளைப் பொறுப்பாளர் சையது மஸ்தான் சால்வை அணிவித்தார் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல் காதர் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்க்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்தனர். இந்நிகழ்வில் மஜக திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல் காதர், மூத்த உறுப்பினர் நிஜாமூதீன் கிளை பொறுப்பாளர் சையது மஸ்தான் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #திருவாரூர்_மாவட்டம் #MJKitWING 26.01.2024.
மஞ்சக்கொல்லையில்… மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா…
ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக நாகை ஒன்றியத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மஞ்சை சதாம் வரவேற்ப்புரையாற்ற, அதனை தொடர்ந்து ஜமாத் தலைவர் யூசுப்தீன் அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள். இதில் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம் 26.01.2024.
புலிவலம்த்தில்….. மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா….
ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின், திருவாரூர் மாவட்டம், புலிவலம் கிளை சார்பாக பள்ளிவாசல் நகர் பகுதியில் ஒன்றிய செயலாளர் அகமது ஜலால் அவர்கள் தலைமையில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் M.ஷேக் அப்துல்லா அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் மதிமுக கொள்கை விளக்க மாநில செயலாளர் ஆரூர் சினிவாசன்,அமமுக மாவட்ட பொருளாளர் முருகானந்தம்,,CPI கிளை செயலாளர் அசோகன், DR. அம்பேதகர் மக்கள் நலசங்கம் ஒருங்கினைப்பாளர் வினோபாலா, மஜக மாவட்ட மருத்துவ அணி மாவட்ட செயலாளர் சித்திக், மாவட்ட பொறுப்பாளர் சரவெடி சக்திவேல், ஊர் பிரமுகர் C.செல்வராஜ், பாசித், ரியாஸ், ரஹ்த்துல்லா, கார்த்தி, அடியற்கை நூர்முகமது, அப்துல்ரஹ்மான், சீனிவாசன், பன்னீர்செல்வம், ஷாஜஹான், மீசை செல்லப்பா உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #திருவாரூர்_மாவட்டம் #MJKitWING 26.01.2024.