அத்திக்கடையில்…. மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா….

ஜனவரி.26.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின், திருவாரூர் மாவட்டம், அத்திகடை & பாலாக்குடி கிளை சார்பாக கிளை அலுவலகத்தில் கிளை பொறுப்பாளர் ரிஸ்வான் முகம்மது அவர்கள் தலைமையில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் அத்திகடை முன்னால் ஜமாத் துணை தலைவர் A.அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

கிளைப் பொறுப்பாளர் சையது மஸ்தான் சால்வை அணிவித்தார்

மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல் காதர் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்க்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்தனர்.

இந்நிகழ்வில் மஜக திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல் காதர், மூத்த உறுப்பினர் நிஜாமூதீன் கிளை பொறுப்பாளர் சையது மஸ்தான் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#திருவாரூர்_மாவட்டம்
#MJKitWING
26.01.2024.