தோப்புத்துறையில்…. மஜகவின் 17 ஆவது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு… தலைவர் மு.தமிமுன் அன்சாரியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸை ஒட்டி துவங்கி வைத்த கருணாஸ்…

ஜனவரி.26.,

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவையொட்டி, மனிதநேய ஜனநாயக கட்சியின் 17-வது ஆம்புலன்ஸ் சேவை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நாகை மாவட்டம், தோப்புத்துறையில் நடைபெற்றது.

முன்னதாக மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்.

பிறகு ஆம்புலன்ஸ் சேவையை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அவர் சாவியை வழங்க, அதை ஜமாத் மன்ற தலைவர் முகம்மது ஷாஃபி, இந்து இளைஞர் நற்பணி மன்ற தலைவர் J. பாலசுப்ரமணியம், ஆரிபா குழுமங்களின் தலைவர் சுல்தானுல் ஆரிபின் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

ஆம்புலன்ஸை அர்ப்பணித்த கருணாஸ் அவர்கள், அவரே வண்டியை சாவி கொடுத்து ஓட்ட, அருகில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களையும் உட்கார வைத்துக் கொண்டு செல்ல கூட்டம் கைத்தட்டி ஆராவாரம் செய்தது.

பிறகு துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்கள் பிரேத குளிர்சாதனப்பெட்டியை அர்ப்பணித்தார்.

600-க்கும் மேற்பட்டோருக்கு சந்தன மரக்கன்றுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் சேது. கருணாஸ் அவர்களின் உரை கலகலப்பாகவும், சம கால அரசியல் போக்குகளை உரசி செல்லும் விதமாகவும் இருந்தது.

இந்நிகழ்வில் தோப்புத்துறை, வேதாரணியம், தேத்தாக்குடி, ஆறுகாட்டுத் துறை, புஷ்பவனம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.

தோப்புத்துறையை சேர்ந்த சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரக பிரமுகர்களும், ஜமாத் மன்ற நிர்வாகிகளும், JAQH நிர்வாகிகளும், இந்து இளைஞர் நற்பணி மற்ற நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.

நிகழ்வை மஜக-வினருடன் மருதநாயகம் ஆட்டோ சங்கம், சிங்கப்பூர் மஹ்ஜூன் அறக்கட்டளை, மாணவர் இந்தியா, MSF, ப்ரியம் அறக்கட்டளை, ஒலிசா அறக்கட்டளை, உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளும் இணைந்து உபசரித்தனர்.

ஆம்புலன்ஸ் வாங்கிட நிதியுதவி செய்த சிங்கப்பூர் வாழ் தோப்புத்துறை வாசிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் முன்ஷி யூசுப்தீன், மாவட்ட அவைத் தலைவர் சதக்கத்துல்லாஹ் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் மன்சூர், சாகுல் ஹமீது, மாணவர் இந்தியா மண்டல செயலாளர் நிஷாத் மாவட்ட துணை செயலாளர்கள் அஹமதுல்லாஹ், பாலமுரளி, பேபி ஷாப் பகுருதீன், ஜித்தா மண்டல நிர்வாகி மஸ்தான், மாவட்ட It WING துணை செயலாளர் மாலிக், நாகை ஒன்றிய செயலாளர் மஞ்சை சதாம், வேதை நகர நிர்வாகிகள் அவுலியா முகம்மது, மீரா முஹம்மது, முகமது யூசுப், முகம்மது ஷரீஃப், முருகானந்தம், முகமது அலி ஜின்னா, சுப்பிரமணியன், சாகுல் ஹமீத், சதாம் உசேன், முகமது இப்ராஹிம், நிஜாம், சபிக் ரஹ்மான், அக்பர் ஷா, இஸ்மத், அமானுல்லா, முஸ்தபா, அப்துல் மஜீத், ஷேக் அமானுல்லா, முகமது நாஜிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
26.01.2024.