ஜனவரி.27., நாட்டின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழக முழுவதும் தேசிய கொடியேற்று நிகழ்வுகள், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுகள், இலவச மருத்துவ முகாம்கள் என்று பரவலாக நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒரு நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்டம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் நூர் முகமது தலைமையில் ஆலங்குளத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் பங்கேற்று மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்கள். இம் முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். இந்நிகழ்வை தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ராஜா மற்றும் நிர்வாகிகள் தமீமுன் அன்சாரி, காளிராஜ், பெரியசாமி, மகபூப் ஜான், கருப்பையா, ரஹ்மத்துல்லாஹ், முத்துவேல், சம்சுதீன், இட்லி கடை சம்சுதீன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #விருதுநகர்_மாவட்டம் 26.01.2024.
Author: admin
நாகூரில்… மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா…
ஜனவரி.27., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் நாகூர் நகரத்தில் முன்னால் ஜமாத் நிர்வாகி M. சுல்தான் மரைக்காயர் அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள். இதில் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் முகமது இப்ராஹிம், நகர செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் யாசர், முகமது பைசல், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம் 26.01.2024.
சேலத்தில்… 75வது குடியரசு தின விழா.! மஜக மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா தேசியக்கொடி ஏற்றினார்…
ஜனவரி.27., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற தேசிய கொடியேற்று நிகழ்வில் மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட துணை செயலாளர் சேட்டு, இளைஞர் அணி செயலாளர் ஜபிர், Mjts முஸ்தபா. மாபலி, அம்மா பேட்டை பகுதி செயலாளர் சதாம் உசேன், நிசார், பாபு பாய் முபாரக், அனீஸ் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #சேலம்_மாவட்டம் 26.01.2024.
அதிராம்பட்டினத்தில்.. மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா….
ஜனவரி.27., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு நிகழ்வாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகர செயலாளர் முகமது பாசித் அவர்கள் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட செயலாளர் A.ஷேக் அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்தார். பிறகு தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று மஜக-வினர் இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை நகரத் துணைச் செயலாளர் அஜ்மல் உள்ளிட்ட மஜக-வினர் எழுப்பினார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 26/01/2024.
மஜக தென்சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்! மாநில துணைச்செயலாளர் S.M.நாசர் பங்கேற்பு..!
ஜனவரி.26., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் காதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைச் செயலாளர் S.M.நாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். இதில் நிர்வாக கட்டமைப்புகள், கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் M.A.அலி, ஆலந்தூர் கபீர், அடையார் நாகூரான் உள்ளிட்ட மாவட்ட மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்சென்னை_கிழக்கு_மாவட்டம் 25.01.2024.