அதிராம்பட்டினத்தில்.. மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா….

ஜனவரி.27.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு நிகழ்வாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகர செயலாளர் முகமது பாசித் அவர்கள் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட செயலாளர் A.ஷேக் அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்தார். பிறகு தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று மஜக-வினர் இனிப்புகளை வழங்கினர்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை நகரத் துணைச் செயலாளர் அஜ்மல் உள்ளிட்ட மஜக-வினர் எழுப்பினார்கள்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
26/01/2024.