ஜனவரி.27., தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் புகழ்பெற்ற இமாம் ஷாபி மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50-ஆம் ஆண்டு பொன்விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நிகழ்விடத்திற்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர். பள்ளியின் வளர்ச்சிக்கும் அறிவார்ந்த செயல்பாடுகளுக்கும் வாழ்த்துக் கூறிய அவருக்கு நிர்வாகத்தின் சார்பில் ஜனாப் சைபுதீன் ஹாஜியார் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார். பொன்விழா மலரையும் பரிசளித்தார். பல்வேறு அறிஞர்களும், கல்வி ஆர்வலர்களும் இதில் பங்கேற்று வருகிறார்கள். இன்றைய நிகழ்வில் தலைவருடன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை A.ஷேக், மாவட்ட பொருளாளர் மல்லி அபூபக்கர், மாவட்ட ஐடிவிங் செயலாளர் J.S.சாகுல் ஹமித், மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பிப்ரவரி 10 - திருச்சி முற்றுகை களம் குறித்த ஆயத்த ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய தஞ்சை தெற்கு மாவட்டத்தில் இதுவரை 40 வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 27.01.2024
Author: admin
பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்..
500 பேர் பங்கேற்க ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்... ஜன.27., மனிதநேய ஜனநாயக கட்சியின், ராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சையத் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான கோட்டை ஹாரிஸ் மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் புதுமடம் பைசல் ஆகியோர் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக பேசினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 500-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக ஓய்வு பெற்ற முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் தெற்கு தரவை அபுல் கலாம், ராமநாதபுரம் pvm அபுல் ஹசன், இதம்பாடல் சாகுல் ஹமீது ஆகியோர் தங்களை மஜக-வில் இணைந்து கொண்டனர் இதில் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் மீசல் கனி, கிழக்கு மாவட்ட பொருளாளர் நாகூர் மீரான், தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் நஸிர், மாவட்ட துணைச் செயலாளர் காஜமைதின், ராமநாதபுரம்
மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..
ஜனவரி.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அ.ஷஃபிக் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும், திருச்சி போராட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணைச் செயலாளர் ரியாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் திலீப், துணைச் செயலாளர் வெங்கடேஷ், பகுதி செயலாளர்கள் ஹாரிஸ், ஜாவித் மற்றும் தீபக் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 26.01.2024
பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்….
,700 பேர் பங்கேற்க நெல்லை மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்... மாநில பொருளாளர் ஜே.எஸ் ரிஃபாயீ பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்… ஜன.27., மனிதநேய ஜனநாயக கட்சியின், நெல்லை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் JS.ரிஃபாயீ அவர்கள் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் மாநில துணைச் செயலாளர் பேரா. அப்துல் சலாம் அவர்கள் மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய போராட்டத்தின் இறுதிக்கட்ட பரப்புரை பணிகள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து 700-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட பொருளாளர் முகமது அலி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் அப்பாஸ், ஆஷிக் ரஹ்மான் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர், தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING
நிரந்தர விடுதலையே இலக்கு…. போலி பரப்புரையை முறியடிப்போம்! தஞ்சை மத்திய மாவட்ட மஜக கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் புறப்பட திட்டமிடல்….
ஜனவரி.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மத்திய மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் மாநில துணை செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான யூசுப் ராஜா தலைமையில் தஞ்சாவூர் முஹம்மது புரம் நேஷ்னல் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தஞ்சை அப்துல்லாஹ் வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் வல்லம் அகமது கபீர் கலந்துக் கொண்டார். அப்போது பிப்ரவரி 10, அன்று திருச்சியில் நடைபெறும் மத்திய சிறை முற்றுகை போராட்டத்தின் அவசியம் குறித்து மாநில துணை செயலாளர் யூசுப் ராஜா விளக்கினார். அவர் பேசியதாவது... தற்போது நாம் குறிப்பிடும் 36 சிறைவாசிகள் அவர்களின் சட்டப் போராட்டத்தால் பரோலில் வந்துள்ளனர். இது தமிழ்நாடு அரசின் சிறைத் துறை சிரமம் இல்லாமல் செய்து தர வேண்டிய காரியம். இதை கூட சட்டப் போராட்டம் நடத்தியே பெற வேண்டியுள்ளது. இதை கூட சிலர் தங்கள் அமைப்பு பெற்றுக் கொடுத்ததாக கூறி விளம்பரம் தேடுகின்றனர். வலுக்கட்டாயமாக கேட்டு நன்றி விளம்பரம் செய்கிறார்கள். அவர்கள் விடுதலை ஆகி விட்டதாக போலி பிரச்சாரம் செய்கிறார்கள். நாம் பேரறிவாளன் உள்ளிட்டோர் நிரந்தர விடுதலை பெற்றது போல அவர்கள் நிரந்தர விடுதலை பெற வேண்டும் என போராடுகிறோம். அதற்கு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் தீர்மானம் போட்டு கவர்னருக்கு