You are here

அதிரையில் … இமாம் ஷாபி பள்ளி பொன்விழா … மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு

ஜனவரி.27.,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் புகழ்பெற்ற இமாம் ஷாபி மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50-ஆம் ஆண்டு பொன்விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று நிகழ்விடத்திற்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

பள்ளியின் வளர்ச்சிக்கும் அறிவார்ந்த செயல்பாடுகளுக்கும் வாழ்த்துக் கூறிய அவருக்கு நிர்வாகத்தின் சார்பில் ஜனாப் சைபுதீன் ஹாஜியார் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

பொன்விழா மலரையும் பரிசளித்தார்.

பல்வேறு அறிஞர்களும், கல்வி ஆர்வலர்களும் இதில் பங்கேற்று வருகிறார்கள்.

இன்றைய நிகழ்வில் தலைவருடன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை A.ஷேக், மாவட்ட பொருளாளர் மல்லி அபூபக்கர், மாவட்ட ஐடிவிங் செயலாளர் J.S.சாகுல் ஹமித், மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பிப்ரவரி 10 – திருச்சி முற்றுகை களம் குறித்த ஆயத்த ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய தஞ்சை தெற்கு மாவட்டத்தில் இதுவரை 40 வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
27.01.2024

Top