பிப்ரவரி.12., மனிதநேய ஜனநாயக கட்சியில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. நேற்று கடலூர் தெற்கு மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மாநில செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான நெய்வேலி. இப்ராகிம் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில் கிளை வாரியான சுற்றுப்பயணத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு, அணிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மட்டும் இனி மேற்கு மாவட்டம் என்றும், பூம்புகார் மற்றும் சீர்காழி தொகுதிகள் கிழக்கு மாவட்டமாக செயல்படும் என்றும் அதற்கேற்ப நிர்வாகிகள் நியமனம் அறிவிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் எதிர்வரும் பிப்ரவரி 28- மயிலாடுதுறையில் நடைபெறவிருக்கும் தலைமை பொதுக்குழுவுக்கான அமைப்புக் குழுவும் உருவாக்கப்பட்டது. துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநிலச் செயலாளர்கள் நாகை முபாரக், வல்லம் அகமது கபீர், நெய்வேலி இப்ராகிம், மாநிலத் துணைச் செயலாளர்கள் பேரா. அப்துல் சலாம், பண்டாரவடை மஹ்ரூப் ஆகியோர் கொண்ட தலைமை ஆயத்தக் குழுவுடன், இக்குழு இணைந்து செயலாற்றும் என்றும் முடிவு செய்யப்பட்டது. பிரம்மாண்ட மண்டபம், தங்குமிட வசதிகள், போக்குவரத்து வசதிகள், உணவு வினியோக குழு,
Author: admin
திருப்பூரில் எழுச்சி.!! மஜகவில் இணைந்த இளைஞர் பட்டாளம்…
பிப்ரவரி:12., திருப்பூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியான சிறப்புவாய்ந்த ஊத்துக்குளியில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இளைஞர்கள் திரளானோர் இணைப்பு நிகழ்வு மாவட்ட செயலாளர் ராயல்ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட பொருளாளர் பாபு அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்வில் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் நெல்லை ரமேஷ் தேவர், MJTS மாநில துணைச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இளைஞர்கள் திரளானோர் கட்சியில் இணைந்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் மஜக செயல்பாட்டாளர் ஜாகீர் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் செயல்பாடுகள், கட்சியின் கொள்கை குறித்து விரிவாக விவரித்து பேசினார். சிறப்பான முறையில் நடந்த இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பர்ஷாத், தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் அக்கிம், பல்லடம் நகர செயலாளர் அபுதாஹிர், பல்லடம் நகர பொருளாளர் ஷாஜகான் மங்கலம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சமூக போராளி சலீம்மாலிக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வானவில் காதர், துணைச் செயலாளர் ஜாபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருப்பூர்_மாவட்டம் 11-02-2024.
லால்பேட்டையில்… மஜக இல்ல புதுமனை புகுவிழா.! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு
பிப்ரவரி.11., இன்று கடலூர் (தெற்கு) மாவட்டம் லால்பேட்டையில் அமீரக மஜக செயல்பாட்டாளர் Z. பையாஜ் அஹமது அவர்களின் புதிய இல்லம் திறப்பு விழா நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் மஜக பொதுச்செயலாளர் மெளலா நாசர் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். மாநில செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாநில துணை செயலாளர் துரை முகமது, சுற்றுசூழல் அணி மாநில செயலாளர் ஹமீது ஜெகபர், மாணவர் இந்தியா மண்டல செயலாளர் வழக்கறிஞர் முஸரப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லால்பேட்டை தையூப், பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட செயலாளர் OR ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் ஆயங்குடி ஃபஜில் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் சிதம்பரம் ரபீக், சிதம்பரம் இக்பால், கொள்ளுமேடு ரியாஸ், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ சேவை அணி அப்துல்லா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் வண்டிகேட்காஜா மைதீன், குமராட்சி ஒன்றிய செயலாளர் காசிம், லால்பேட்டை நகர செயலாளர் யூனுஸ், நகர பொருளாளர் நூர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம் 11.02.2024.
லால்பேட்டை நிகழ்ச்சி! பதவிகள் இல்லாதபோதும் நம்மோடு பயணிப்பவர்களே உண்மை தொண்டர்கள்! மஜக மாவட்ட செயற்குழுவில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு
பிப்ரவரி.11., இன்று கடலூர் (தெற்கு) மாவட்ட மஜக-வின் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் லால்பேட்டையில் நடைப்பெற்றது. மாநிலச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான நெய்வேலி, இப்ராகிம் முன்னிலை வகித்தார். தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இதில் பங்கேற்று கலந்துரையாடினார். செயல்பாடுமிக்க ஆளுமைகள் நிர்வாக பொறுப்பேற்பதன் அவசியம் குறித்து விளக்கியவர், மாவட்ட கிளைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். பிறகு பேசும்போது, பதவிகள் - அதிகாரம் இல்லாத நிலையிலும் நம்முடன் இருப்பவர்களும், துடிப்புடன் கட்சி பணியாற்றுபவர்களும்தான் கட்சியின் உண்மை தொண்டர்கள் என்றவர், கட்சிக்காக உழைப்பவர்களை தலைமை எப்போதும் கொண்டாடும் என்றும் கூறினார் . பிறகு மாவட்ட நிர்வாகிகள் கிளைகள் தோறும் சந்திப்புகள் நடத்தும் பயண அட்டவணையும் அறிவிக்கப்பட்டது. இதில் மாநில துணைச் செயலாளர் துரை முகம்மது, சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் ஹமீது ஜெகபர், மாணவர் இந்தியா மண்டல செயலாளர் வழக்கறிஞர் முஸரப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லால்பேட்டை தைய்யூப், பொதக்குடி ஜெய்னுதீன் ஆகியோரும் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ஆயங்குடி ஃபஜில் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் சிதம்பரம் ரபீக், சிதம்பரம் இக்பால், கொள்ளுமேடு ரியாஸ், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ சேவை அணி
லால்பேட்டையில்… மஜக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு..! மஜக பொதுச்செயலாளர் மெளலா நாசர் அர்ப்பணிக்க லால்பேட்டை ஜமாஅத் தலைவர் பெற்றுக் கொண்டார்
பிப்ரவரி.11., மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டபோது கட்சியின் சார்பில் இரண்டாவதாக கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் பழுதடைந்த நிலையில், இன்று புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. மஜக பொதுச்செயலாளர் மெளலா நாசர் அர்ப்பணித்தார். அவர் ஆம்புலன்ஸ் சாவியை லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் AMF. சாதிக், ஜமாஅத் தலைவர் KA. அமானுல்லா விடம் ஒப்படைக்க, அவர் அதனை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மாநில செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாநில துணை செயலாளர் துரை முகமது, சுற்றுசூழல் அணி மாநில செயலாளர் ஹமீது ஜெகபர், மாணவர் இந்தியா மண்டல செயலாளர் வழக்கறிஞர் முஸரப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லால்பேட்டை தையூப், பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட செயலாளர் OR ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் ஆயங்குடி ஃபஜில் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் சிதம்பரம் ரபீக், சிதம்பரம் இக்பால், கொள்ளுமேடு ரியாஸ், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பைசல், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் வண்டிகேட்காஜா மைதீன், குமராட்சி ஒன்றிய செயலாளர் காசிம், லால்பேட்டை நகர செயலாளர் யூனுஸ், நகர பொருளாளர் நூர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம் 11.02.2024.