தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர்… மஜக மாவட்ட அலுவலகம் வருகை..

மார்ச்.23.,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியின் தென்காசி தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி. டாக்டர் ராணி ஸ்ரீ குமார் அவர்கள் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று மஜக தென்காசி மாவட்ட அலுவலகத்திற்கு வேட்பாளர் உடன் திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன் ஆகியோர் வருகை தந்து மஜக தென்காசி மாவட்ட செயலாளர் அஜ்மீர் காஜா உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

மேலும் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியில் இணைந்த மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் தென்காசி மாவட்ட அவைத் தலைவர் முஸ்தபா, மாவட்ட பொருளாளர் செய்யது அலி, மாவட்ட துணைச்செயலாளர் சிக்கந்தர் உள்ளிட்ட மஜக சொந்தங்கள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தென்காசி_மாவட்டம்
23.03.2024.