சவூதி தம்மாம் இஃப்தார்! உலக அமைதிக்காக பிரார்த்திப்போம்! நம் நாட்டவர்களுக்கு_வாய்ப்பளிக்கும் சவூதி அரசுக்கு நன்றி! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

மார்ச்.23.,

சவூதியில் வாழும் தமிழ்நாட்டவர்களிடம் உற்சாகமாக செயல்படும் தொண்டு அமைப்புகளில் சவூதி தமிழ் கலாச்சார மையம் முக்கியமான இடத்தை வகிக்கிறது.

அவ்வமைப்பின் சார்பில் சவூதி அரேபியாவின் தம்மாம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்வில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

சவூதியின் கிழக்குப் பகுதியான தம்மாம் வட்டாரத்தில் வசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் திரளாக வருகை தந்திருந்தனர்.

அங்கு பேசிய அவர் வளைகுடா நாடுகளுக்கும் – தமிழர்களுக்கும் இடையிலான வரலாற்று – வணிக தொடர்பு குறித்து பேசினார்.

இங்கு எல்லா சமூகத்தவரும் ஒன்று சேர்ந்து வந்திருப்பது குறித்து பாராட்டியவர், இதுதான் காலத்தின் தேவை என்றார்.

மேலும் அவர் பேசியதாவது:

வானவர் ஜிப்ரயில் (அலை) அவர்கள் குரல் வடிவில் நபிகளாருக்கு அளித்த வேதம் திருக்குர்ஆன். இது எழுதப்பட்டதல்ல. குரல் வடிவில் அருளப் பெற்று பின்னர் தொகுக்கப்பட்டது.

இது ஒரு மலை மீது இறக்கப்பட்டிருந்தால் அந்த மலை தூள் தூளாகியிருக்கும் என்கிறது இறை வேதம்.

இதில் முதல் வசனமே ‘ஒதுவீராக… படைத்த உன் இறைவனின் பெயரால் ஒதுவீராக…’ என கல்வியை போதிக்கிறது.

அடிக்கடி அதில் வரும் வார்த்தைகளில் ஒன்று ‘நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என்பதாகும்.

இந்த வேதம் மனிதர்களை சிந்திக்க தூண்டுகிறது.

இந்த மாதத்தில் தான் திருக்குர்ஆன் முதலில் அருளப்பட்டது.

அதற்காக இறைவனுக்கு நன்றி கூறியே நோன்பு நோற்கிறோம்.

இரக்கம், கருணை, தர்மம் ஆகியவற்றை இம்மாதத்தில் அதிகமாக காண்கிறோம்.

உலகின் பல நாடுகளில் சமாதான – அமைதி ஒப்பந்தங்கள், கைதிகள் விடுதலை ஆகியன நடக்கிறது.

அத்தகைய புனித மாதத்தில் உலகெங்கும் அமைதி நிலவ இறைவனிடம் பிரார்த்திப்போம்.

நம் நாட்டிற்கும், சவூதிக்கும் இடையில் நல்லுறவு நிலவுகிறது.

சவூதி அரேபியாவில் நம் நாட்டவர்கள் சாதி, பேதமின்றி இங்கு வந்து வேலை பார்க்கவும், தொழில் செய்யவும் இருநாட்டு அரசு வாய்ப்புகளை தருகிறது. நம் வாழ்வு உயர வழிகாட்டுகிறது.

இதற்காக இந்த நாட்டு ஆட்சியாளர்களுக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவரது உரை பலராலும் முகநூல் வழியே நேரலை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கவிஞர் சல்மா, பஹ்ரைன் – பாரதி தமிழ் சங்க தலைவர் முகம்மது உசேன் மாலிம், அதன் துணைத் தலைவர் வல்லம் பசீர், தம்மாம் தொழிலதிபர் universal inspection Company நிறுவனர் பத்ருதீன் அப்துல் மஜீத் ஆகியோர் பேசினர்.

இவர்கள் அனைவருக்கும் தான் எழுதிய ‘புயலோடு போராடும் பூக்கள்’ நூலை தலைவர் வழங்கினார்.

நிகழ்ச்சி இரவு 8.30 வரை உற்சாகம் குறையாமல் நீடித்தது.

இந்நிகழ்வில் பங்கேற்க 1300-க்கும் அதிகமானோர் வருகை தர முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால் 700 பேர் என்ற அளவில் மட்டுமே பங்கேற்கும் கொள்ளளவு கொண்ட மண்டபமாக அது இருந்தால் வருகையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

கொரோனாவுக்கு பிறகு இங்கு நடைபெற்ற பெரிய நிகழ்ச்சி இதுவேயாகும் என பலரும் கூறினர்.

நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் ஆர்வமுடன் வந்த அனைவருவரையும் படம் எடுக்க அனுமதித்து, அவர்கள் அனைவருடனும் அளவளாவினார்.

இது அவருக்கு சவூதியில் முதல் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியை சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் தலைவர் ரஹ்மத்துல்லா, அதன் கிழக்கு மண்டல தலைவர் நூஹ், பொதுச் செயலாளர் சரவணன் பெரியசாமி, பூவரசன் உள்ளிட்டோர் சிறப்பாக ஒருங்கிணத்திருந்தனர்.

மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் துணைப் செயலாளர் பந்தநல்லூர் உஸ்மான், மனிதநேய கலாச்சாரப் பேரவையின் சவூதி மூத்த நிர்வாகி செய்யது அலி, தம்மாம் மண்டல பொறுப்பாளர் ஜாகீர், ரியாத் மண்டல செயலாளர் முஸ்தபா மற்றும் ஹாஜா கமருதீன் உள்ளிட்ட ரியாத் MKP சொந்தங்களும் பங்கேற்றனர்.

தகவல்:
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKPITWING
#தம்மாம்_மண்டலம்
#சவூதி_அரேபியா
22.03.2024.