You are here

நாடாளுமன்ற தேர்தல் 2024… ராணிப்பேட்டையில்… அமைச்சருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு….

மார்ச்.23.,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான R. காந்தி அவர்களை மஜக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் A. அப்ரர் அஹமத் அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ராணிப்பேட்டை_மாவட்டம்
23.03.2024.

Top