அதிரையில் மஜக சார்பில் தொடர்ந்து கபசுர குடிநீர் விநியோகம்!


ஜூன்.29,
அதிராம்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சேதுரோடு பிஸ்மி மெடிக்கல் அருகில் நகர துணைச் செயலாளர் மர்ஜூக் அவர்கள் தலைமையில் ‘கபசுர குடிநீர்’ வழங்கப்பட்டது.

நேற்றை தொடர்ந்து இன்றும் நகரின் பிற பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட கபசுர குடிநீரை வணிகர்கள், ஓட்டுநர்கள், பயணிகள், பொதுமக்கள் என சுமார் 300 க்கும் அதிகமானவர்கள் அருந்தி பயனடைந்தனர்.

இந்நிகழ்வில், மஜக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), அதிரை சேக், அதிரை நகர செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் அஷ்ரப், இளைஞரணி செயலாளர் ஜபருல் ஹக், அஹமது அஸ்கர், நபில் ஆகியோர் கலந்துக் கொண்டு விநியோகித்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING #அதிரை_நகரம்.
#தஞ்சைதெற்குமாவட்டம்.